lokesh rajini kamal film buzz
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்!

Share

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதிலிருந்து வெளியேறியதற்கான சுவாரஸ்யமான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

கைதி 2 பட வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ரஜினி – கமல் படத்திற்காக லோகேஷ் ஒரு கதையைத் தயார் செய்துள்ளார். அந்த கதை இருவருக்கும் பிடித்திருந்தது.

ஆனால், ரஜினியும் கமலும் தங்களுக்கு ஒரு தீவிரமான ஆக்ஷன் கதைக்குப் பதிலாக, ‘லைட் ஹார்ட்டட்’ (எளிமையான மற்றும் நகைச்சுவை கலந்த) படம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

தனது பாணிக்கு இது செட் ஆகாது என்பதை உணர்ந்த லோகேஷ், “அந்த மாதிரி படம் என்னால் பண்ண முடியாது” என்று கூறிவிட்டு நாகரிகமாக அப்படத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

லோகேஷ் விலகியதைத் தொடர்ந்து, ‘தலைநகரம்’ புகழ் சுந்தர்.சி இப்படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இரண்டே நாட்களில் வெளியேறிவிட்டார். தற்போது ‘டான்’ பட புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை (தலைவர் 173) இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜ், தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...