‘கிறுக்கா கிறுக்கா உனையே ரசித்தேன்’ – இணையத்தை கலக்கும் அஸ்வின்- ஷிவாங்கி ஆல்பம்
ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கிறது அஸ்வின் – ஷிவாங்கி இணைந்து கலக்கியுள்ள புதிய ஆல்பம் பாடல்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர்கள் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடி.
ஆல்பம் பாடல்கள், விளம்பர படங்கள் என தனித்தனியாக கலக்கி வந்த இருவரும், தற்போது வெள்ளித்திரையில் படுபிஸியாக உள்ளனர்.
இந்த நிலையில், தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘அடிபொலி’ என்ற ஆல்பம் பாடலில் இணைந்துள்ளனர் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி. நேற்று 20ம் திகதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசையமைப்பாளர் சித்துகுமார் இசையில் ஷிவாங்கி மற்றும் சூப்பர் சிங்கர் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து இப் பாடலை பாடியுள்ளனர். இப் பாடலில் அஸ்வின் நடித்துள்ளார்.
அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இணையமாட்டார்களா என காத்திருந்த ரசிகர்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றியுள்ள இந்த ஆல்பம் பாடல் தற்போது மிகப்பெரும் வைரலாகி வருகிறது.
Leave a comment