பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் நாளை (09) வெளியாகாது என்பதை அதன் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வெளியாகியுள்ள அறிக்கையில் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில தவிர்க்க முடியாத சூழல்கள் காரணமாகவே திரைப்படத்தின் வெளியீட்டைப் பிற்போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
படத்தின் புதிய வெளியீட்டுத் திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், அது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும்.
இந்தத் தாமதம் தயாரிப்புத் தரப்பிற்கும் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ள நிறுவனம், ரசிகர்கள் காட்டி வரும் அதீத ஆர்வத்தை மதிப்பதாகவும், தற்போதைய சூழலில் தொடர்ந்து பொறுமையுடன் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
நீண்ட நாட்களாக இந்தப் படத்திற்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தத் திடீர் அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து வரும் நிலையில், புதிய திகதி அறிவிக்கப்படும் வரை அமைதி காக்குமாறு படக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.