2020ஆம் ஆண்டு ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இந்தப் பெறுபேறுகளை அரச பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இவ் வருடம் மார்ச் மாதம் நடைபெற்றிருந்தன.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.