கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்பு பகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகங்களில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் விற்பனை சந்தைகள் திங்கட்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டன. துணுக்காய்,மாந்தை கிழக்கு,ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் பிரதேச செயலகங்களில் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கிலான...
சித்திரை புத்தாண்டு காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மதுபான நிலையங்கள் மூடப்படும் என, இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது....
பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில்...
யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் பிரபல வியாபாரி ஜுவிதா யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 5 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயின் உடமையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் யாழ்ப்பாணத்தின் பிரபல ஹெரோயின்...
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வழமை போன்று இம்முறையும் மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உயர்திரு.சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம...
வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற மரண வீட்டுக்கு சென்ற முதியவர் அதீத வெயில் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் குடாவேம்படி சுன்னாகம் பகுதியை சேர்ந்த நாகன் தேவராஜா வயது 63 என பொலிசார்...
நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்ட பொழுது மயக்கமடைந்த இளைஞன் அதிகாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மாசுவன் சந்தி நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் குருசாந்தன் வயது (35) என பொலிஸார்...
வடக்கு மாகாண மாற்றுத் திறனாளிகளினுடைய இசை திறமையை வெளிக்கொண்டுவரும் முகமாக முதல்முறையாக இசை போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே ஏற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்....
யாழ். சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்தனர். இச்சம்பவம்...
இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். இவருடைய இறுதிக் கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை (13) 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து...
இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று (11)...
கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே விலை அதிகரிப்பிற்கான காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 1100 ரூபா தொடக்கம் 1200...
சர்வதேச நாணய நிதியத்தின் தொழிநுட்ப உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தி இலங்கையிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கும் நிலையான பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பிரஜைகள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில்...
இலங்கையின் டோக் குரங்குகளை சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. 1 இலட்சம் டோக் குரங்குகளை முதற்கட்டமாக வழங்கும் மானியக் கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் விவசாய...
பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகளை விரைவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். டொலரின்...
எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு கடந்த...
அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக படிப்படியாக தேர்தல்களை நடத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...
இலங்கையில் சத்திர சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தின் பாவனையை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது. இதன்படி, மூன்று வகை மருந்துகளின் பயன்பாடு தற்காலிகமாக...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூஆர் கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை பெற்றோலிய...