ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கல்கிஸை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணித்தார். கரலியத்த, தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது...
யாழ்., கொழும்புத்துறையில் இன்று மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். சுதேஸ்வரன் சுதர்சன் என்ற 29 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார். கொன்கிறீட் கல் அரியும் இயந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அதில் ஏற்பட்ட மின்...
பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) சில ஷரத்துகளும், பல ஷரத்துகளில் திருத்தங்களும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று...
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் தொடர் போராட்டம் ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மகளிர் தினத்தைத் துக்கநாளாகக் கடைப்பிடித்து இன்று முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
பதுளை, ஹாலி எல, உடுவரை தோட்டத்தைச் சேர்ந்த உயர்தர மாணவி ஒருவர் இன்று பிற்பகல் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஹாலிஎல நகர பிரபல தமிழ்ப் பாடசாலையில் கற்கும் 18 வயதுடைய குறித்த மாணவி, பாடசாலைக்குச்...
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர, தான் வகித்த அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இது தொடர்பான பதவி துறப்புக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவர் அனுப்பியுள்ளார்....
இலங்கையில் நின்று, நிலைத்து நீடிக்க கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது ”சகலரையும் ஒன்றிணைத்து, நிரந்தரத் தீர்வு ஒன்றை நோக்கி முன்னேறுவதற்காக தமிழ்,...
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும், தமிழ்நாடு – திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமைக்கழகச் செய்தி தொடர்புச் செயலாளர் கே.எஸ். இராதாகிருஷ்ணனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் முல்லைத்தீவின் தற்கால நிலைமைகள் தொடர்பிலும்,...
பண்டாரவளை மாநகரில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியினரால் பாரியளவிலான தீப்பந்தப் போராட்டம் நேற்றிரவு 7 மணியிலிருந்து 10 மணி வரை நடத்தப்பட்டது. அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஆண்களும், பெண்களுமாகப் பெருந்திரளானோர் தீப்பந்தங்களுடன்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இந்நிலையில், சுமுகமான கலந்துரையாடல் பலனளித்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு...
இலங்கையின் நீதி முறைமை குறித்து சில விடயங்களை ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் அம்பலப்படுத்தியிருக்கின்றார் கொழும்புக்கான பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை. ஜெனிவா அமர்வில் Transition International என்ற அமைப்பின் சார்பாக நேற்று...
“இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.” -இவ்வாறு ஜெனிவா அமர்வில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை....
“நாட்டு மக்களுக்கு நியாயமானதை வழங்கவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ராஜபக்சக்களால் மாத்திரமே முடியும். பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் மாத்திரமே பிரச்சினைகளுக்குப் பதில் சொல்ல முடியும்.” – இவ்வாறு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். இது...
“கடுமையான டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில், எரிபொருள் நெருக்கடி தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை நகைப்புக்குரியது; அது படுமுட்டாள்தனமானது.” -இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...
தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து நேற்று குறித்த புத்தர் சிலையை...
“எந்த இலட்சியத்துக்காக எமது இளையோர்கள் கடந்தகாலத்தில் தம் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, அந்த இலட்சியத்தை எட்டும் வரையில் எமது பயணம் ஓயாது.” -இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சி –...
அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி விமல் வீரவன்சவுக்கு 73ஆம் இலக்க ஆசனமும், உதய கம்மன்பிலவுக்கு 78 ஆம் இலக்க...
“இந்த ஆட்சியில் அமைச்சுப் பதவியை ஒருவருக்கு வழங்குவதும் அதைப் பிடுங்கி எடுப்பதும் வழமையாகிவிட்டது. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குணமாக மாறிவிட்டது.” -இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். இது...
“நான் அமைச்சரவையிலிருந்து நீதிக்காகவே குரல் கொடுத்தேன். நாட்டின் நலன் கருதி உண்மைகளைப் பகிரங்கமாக உரத்தபடியால் எனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பறித்துள்ளார். எனினும், நீதி வெல்லும்; உண்மை ஒருபோதும் சாகாது.” -இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின்...
அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் 16 எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற...