எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இழுவைப் படகுகளுடன் கைதான 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், ஊற்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர். இதன்போது நீரியல் வளத்துறை அதிகாரிகளால்...
“இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.” – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின்போது, ஐக்கிய...
“இந்த நாட்டின் சிறந்த தலைவரே கோட்டாபய ராஜபக்ச. தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை அவர் மீட்டே தீருவார். பதவி விலகும் எண்ணம் அவருக்கு இல்லை.” – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். இது...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பில் அமைச்சரவைக்கு எதையும் அறிவிக்கவில்லை. அவரின் பதவிக் காலம் பற்றியும் கலந்துரையாடல் இடம்பெறவில்லை.” – இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார் . அமைச்சரவை முடிவுகளை...
ராஜபக்ச சகோதரர்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டபோதும் தான் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தான் வாழ்நாளின் பெரும்பகுதியை ராஜபக்சக்களுக்காக உழைத்த போதிலும் ஒரு தொலைபேசி அழைப்புக்கூட அவர்களிடமிருந்து வருவதில்லை என அவர் கவலை...
இலங்கையில் பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக ஆஸ்திரேலியாவிடம் கடன் கோரப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இக்கடனைக் கோரியுள்ளார். அதற்கமைய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகக் கோரப்பட்டுள்ளது. #SriLankaNews
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்துள்ளது. நேற்றிரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டம் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம்...
தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருவது சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினர். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதத் தடுப்புத்...
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் உட்பட ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தத் தூதுக்குழுவினர் இன்று மாலை...
“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலம் என்பது மிகவும் அச்சுறுத்தலான விடயம். இப்போதும் இந்தச் சட்டத்தில் இதே நிலைமையே காணப்படுகின்றது. ‘திருத்தம்’ என்ற பெயரில் இந்தச் சட்டத்தில் எந்த மாற்றங்களையும் அரசு செய்யவில்லை.”...
“யாழ்ப்பாணத்தின் மூளாய் மண்ணைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி – திருவையாற்றை வதிவிடமாகவும் கொண்ட இ.கிருஷ்ணராஜா ஐயா இன்று அமரத்துவம் அடைந்த செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கின்றது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட...
வடக்கிலிருந்து ஒரே நாளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தப்பிச் சென்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மன்னாரிலிருந்து 3 படகுகளில் தமிழகம் சென்றுள்ளனர். நேற்று ஒரு படகில் புறப்பட்ட 6 பேர்...
கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஒருமுறை கூட கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் இடம்பிடித்துள்ளார். 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெப்ரவரி மாதத்தில் ஒருமுறைகூட கலந்துகொள்ளவில்லை...
இலங்கையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசியப்பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தாக்கு பிடிக்க முடியாமல் பெரும்பாலான...
மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல்...
புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மனபில அரசின் மற்றுமொரு பதவியில் இருந்த விலகியுள்ளார். சீதாவாக்கை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார். இது தொடர்பாக...
வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட பகையின்...
“ராஜபக்ச அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்த அரசுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இனியும் முண்டுகொடுக்காமல் தீர்க்கமான முடிவெடுத்து வெளியேற வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச...
நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறும். இந்த வார கூட்டத்தின்போது அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர், விசேட...
கொழும்பில் நாளைமறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ கூட்டியுள்ள சர்வகட்சி கூட்டத்தில் தாம் பங்குபற்றமாட்டார் என்பதை ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் எம்.பி., பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும்...