அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்குத் தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று அறிவித்தார்....
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி சகலவிதமான பெற்றோல் வகைகளின் விலையும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலப்பகுதிக்குள் லங்கா ஐ.ஓ.சி....
நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமான இந்தச் சந்திப்பு பிற்பகல் 1.30 மணி...
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் சைக்கிளைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சந்தேக்கத்துக்கிடமான முறையில்...
நாட்டில் அடுத்த வாரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் காலப்பகுதியை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் சிங்கள ஊடகமொன்று உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் தற்போது 6 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின்...
“சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமிழ் மக்களின் மனதை வெல்லவும் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நாடகத்தை அரங்கேற்றுகின்றார்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...
“சிங்கள – பௌத்த மக்களின் அமோக வாக்குகளால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் தமிழ் மக்களைக் கைவிடமாட்டார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்.” – இவ்வாறு வெளிவிவகார...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் தயார்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். “பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை” என்றும் அவர்...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளன என்று இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, பருப்பு ஆகியனவற்றின் விலைகள்...
கொழும்பு, கடவத்தை 9ஆம் தூண் பகுதியில் இன்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் பேலியகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சடலம் பேலியகொடை வைத்தியசாலையிலும், மற்றையவரின் சடலம்...
“சர்வகட்சி மாநாட்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமை தவறான முடிவாகும். அரசியல் இலாபத்துக்காகவே அந்தக் கட்சியினர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ”அரசமைப்பின் பிரகாரம் தற்போது...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. புதிய அரசமைப்பு, தமிழ்...
“தொடர்ந்து வந்த அரசுகள் தாம் அவ்வப்போது வழங்கி வந்த வாக்குறுதிகளை மீறியமையால்தான் நாட்டுக்கு இந்த இழி நிலைமை. – இவ்வாறு நேற்று கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஆணித்தரமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக்...
வானில் வந்து ஆலயத்தில் சங்கிலி அறுப்பு! யாழ்., தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். கிளிநொச்சி...
அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக்...
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி...
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்த 16 பேரையும் மண்டபம் அகதி முகாமில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கில் இருந்து 22ஆம் திகதி ஒரே நாளில் 16 பேர் தமிழ்நாட்டுக்குத் தப்பிச்...
“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வைக் கண்டறிவது நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றும்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நேரில் எடுத்துரைத்தார் புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம்...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் இலங்கையர் சார்பான அபிலாஷை ஆவணக் கடிதத்தை, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இன்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம்...
ராஜபக்ச அரசு விரைவில் கவிழும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “நிமல் லான்சாவின் வெளியேற்றமானது, சாதாரண சம்பவம்...