பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார் என்றும், அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பார் என்றும் அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்...
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று போராட்டம் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில்...
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்., மணியந்தோட்டம், உதயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என்று யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்லத் தடை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, கீர்த்தி தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட...
தனமல்வில – உடவலவ வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கப் ஒன்றுடன் ஓட்டோ மோதி விபத்து இடம்பெற்றது எனப் பொலிஸ்...
அவசரகால சட்ட விதிகள் வந்த வேகத்திலேயே வாபஸ்! கடந்த முதலாம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொதுசனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாம் பிரகடனப்படுத்திய அவசரகால நிலையை ஐந்து நாள்களுக்குள் நேற்றிரவு திரும்பவும் தாம்...
நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையை (113) வைத்துக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றது. இது தொடர்பில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோர் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர்....
“இலங்கை தனது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் இந்தத் தருணத்தில், ஒவ்வொருவரினதும் குரலும் முக்கியமானகும்.” – இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இதனை தனது ருவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அவர்,...
நாடாளுமன்றத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பி. முஷாரப் இன்று உரையாற்றும்போது அவர் முன் 5000 ரூபா நாணயத் தாளை நீட்டியபடி நின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சாணக்கியன். ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள்...
“நாட்டில் உள்ள தற்போதை அரசு உடனடியாக மாறி நிலையான அரசொன்றை நிறுவவேண்டும்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி. வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு...
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினராகிய நாங்கள், இன்று முதல் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளோம். அதன்படி, எங்களுடைய 16 உறுப்பினர்களும் சுயாதீனமாகச் செயற்படவுள்ளோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன...
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும், ராஜபக்ச ஆட்சியாளர்களின் சகாவாகக் கருதப்பட்டவருமா நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மாலைதீவுக்குச் சென்றுள்ளார்...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலார் ஜீவன் தொண்டமான், தான் வகித்து வந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அத்துடன், அரசுக்கான ஆதரவை...
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்துச் செயற்படுவதாக அறிவித்ததையடுத்து, இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். #SriLankaNews
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல்...
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு தெரிவித்து இளையோர் மற்றும் வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக கோட்டபாய ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பீடாதிபதிகள்...
பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தனது 77ஆவது வயதில் இன்று காலமானார். இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பலபிட்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது எனக்...
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன என்று ரயில் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது. அதேநேரம், 15 சதவீத தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுகின்றன என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதி வெலயிலுள்ள வீடமைப்பு தொகுதியின் பாதுகாப்புக்கென பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டின் நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலதிகமாக இந்த வீடமைப்புத் தொகுதிக்கு...