அரசுக்கு எதிரான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி தற்போது கொழும்பு – விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது. இதனால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெருமளவான...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், அவர் தலைமையிலான அமைச்சரவையும் உடன் பதவி விலகி சர்வகட்சி அடங்கிய...
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் ஐஸ் ரகப்போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது 455 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது....
கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் காலிமுகத்திடலை நோக்கிவரும் நிலையில், கொழும்பில் பல இடங்களில் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி வீதித்தடைகளைப் பொலிஸார் போட்டுள்ளனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளது எனத்...
கொழும்பின் பிரதான வீதிகளின் முக்கிய பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீதிகளில் நிலையான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் வீதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கொழும்பு கோட்டை, யோர்க் வீதி, வங்கி வீதி உள்ளிட்ட...
கத்திக் குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர் கொழும்பு, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த வேளை இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது....
இனந்தெரியாத நபரால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை, பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால அரசு அமைக்கப்படவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீனக் குழு கவனம் செலுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமல் வீரவன்ஸ, உதய...
ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த மேலும் சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுப் பக்கத்திலிருந்து வெளியேறி இன்னொரு சுயேச்சை அணியாக இயங்கத் தயாராகி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியிடம் தாங்கள் முன்வைத்துள்ள இடைக்கால அரசு யோசனை...
இலங்கைக்கு மருத்துவ உதவிகளை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மருந்துகள் மற்றும் மருத்துவ தளபாடங்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் முடங்கி கிடக்கின்றன. எனவே, இலங்கைக்கு மருத்துவ தளபாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி...
சீனத் தலைநகர் பீஜிங்கில் பாடசாலை மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் நேரடி வகுப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பீஜிங்கில் சாயோயாங் மாவட்டத்தில் நடுநிலைப் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பீஜிங்...
ஜப்பானில் 26 பேருடன் சென்ற சுற்றுலாப் படகைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோகைடோ தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ‘காசு 1’ என்கின்ற படகு சுற்றுலாப் பயணிகளை...
இடைக்கால அரசு ஒன்று உருவாக்கப்படுமாயின் அது எனது பிரதமர் பதவியின் கீழேயே உருவாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலகி, சர்வகட்சி இடைக்கால அரசொன்றை...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சி ஒன்று மொட்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிய வந்துள்ளது. சூரியன் எவ்.எம். வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’...
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அவலத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிக்கும் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வந்த கொரோனாத் தடுப்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசுக்கு எதிராக கொழும்பு – காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோர் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் எம்.ஏ.பிரபாகரன் இன்று நிராகரித்தார்....
“நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கின்றேன். நாட்டில் மேலேலுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும். எனக்கு உலகை ஆளும் பேரரசர் ஆட்சிப் பதவியை வழங்குவதாக...
கொடுங்கோல் அரசின் அடக்குமுறை சார்ந்த மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று கொலன்ன தேர்தல் தொகுதியின் எம்பிலிப்பிட்டிய நகரில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின்...
இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின்போது அமைச்சுப் பதவிகள் கிடைக்காத ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சுப் பதவிகள் கிடைக்காத காரணத்தால் அவர்கள் அனைவரும் அரசின் மீது...