திருகோணமலை – வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூரல் பகுதியில் வீசிய காற்றால் 38 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. உப்பூரல் பிரதேசத்தில் பலத்த மழையுடன் வீசிய காற்றால் மேற்படி வீடுகள்...
“நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் மிகவும் அவசியம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார். நாட்டின் தற்போதைய நிலவரம்...
மின்சாரம் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான அஹமது உசனார் லத்தீபா உம்மா...
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ – 9 வீதியில் கொடிகாமம் – கோயிலாமனை சந்திக்கு அருகில் கார் மற்றும் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. அதில் சைக்கிளில் பயணித்தவர்...
“அரசமைப்பின் 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தும் யோசனை 21ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன...
சுமார் ஓர் இலட்சம் பேரின் கையெழுத்துடன் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரும் கையெழுத்துச் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது என அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு கோரும் அந்தக் கோரிக்கை மகஜரில்...
இராமேஸ்வரம் இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் கோரிக்கைக் கடிதம் ஒன்றைக் கையளிக்க வடக்கு கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின்...
எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த வாரம் முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களுக்கு விடுமுறையை அறிவிப்பதற்கான சுற்றறிக்கை இன்றிரவு வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் பலியாகியுள்ளனர். அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு இன்று சென்ற ஒரு குழுவினர் அங்கிருந்து கடலுக்குக் குளிக்கச்...
வத்தளையில் இன்று இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை – எலக்கந்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர் குறித்த இளைஞர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸ்...
யாழ்., நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்குத் தடைகளை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷுகு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டே வழக்கு மீள முன்னெடுக்கப்பட...
யாழ்ப்பாணம், ஊரெழுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி ஊரெழுவில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், காணாமல்போயிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊரெழு கிழக்குப் பகுதியிலுள்ள பாழடைந்த அறையில் இருந்தே இவர்...
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 173 சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குருவிட்டை, மஹர, நீர்கொழும்பு, வாரியபொல, போகம்பறை, அநுராதபுரம், களுத்துறை, கொழும்பு –...
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நல்லவர்கள் உள்ளனர். நாட்டை மீட்பதற்கான பயணத்தில் அவர்களும் இணைய வேண்டும்” – என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளரும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை...
குடும்பப் பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் பெறுவதற்காகத் தடுத்து வைத்திருந்த நான்கு பேரை வவுனியா – பூவரசங்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடத்தல்காரர்கள் குடும்பப் பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்துவிட்டு அவரது மகளுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு...
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்தப் பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரைத்...
அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான வரைவு நேற்றும் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட போதிலும் அது குறித்துத் தீர்மானிப்பது மீண்டும் அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவையிலும் இவ்விடயம்...
இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்...
நுகர்வோர் அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சிலாபத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த இடத்தில் 5 கிலோகிராம் எடையுள்ள சம்பா அரிசியின் 100 மூடைகள்...
இலங்கை போக்குவரத்துச் சபையால் இன்று விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சபையின் பிரதான நடவடிக்கைப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இந்த விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, பொசன்...