“ஜனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டில் அப்படியே இருக்கின்றோம். முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதமராகிய உங்களுக்கு ஒத்துழைப்போம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். புதிய அரசுக்கு ஆதரவு கோரி...
புதிய அரசில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை கோரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை, டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் இடம்பெறுவார்...
புதிய அமைச்சரவை அமைச்சர்களாக நான்கு பேர் இன்று கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு:- * தினேஷ் குணவர்தன – அரச...
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து வட்டரெக்க சிறைச்சாலையிலிருந்து 26 கைதிகள் காணாமல்போயுள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. தப்பியோடிய கைதிகள் சிறைச்சாலையிலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது...
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்கவுள்ளனர் என்று கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமராகப் பதவியேற்றுள்ள தமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியாக இவர்கள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது....
நீண்டதூர ரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய கல்கிஸை – காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை – பதுளை மற்றும் மருதானை – பெலியத்த ஆகிய மார்க்கங்களில் ரயில் சேவைகள்...
நாவின்ன சந்தி – ஹைலெவல் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எரிவாயு வழங்கக் கோரி இன்று காலை முதல் அப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதன் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான...
மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்து அங்கு சொகுசு இல்லத்தை நிர்மாணித்தமையின் ஊடாக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பிரதமர் பதவியைத் தாம் பொறுப்பேற்கத் தயாராகவுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவரால் நேற்றுமுன்தினம் (12) ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. எனினும், ரணில் விக்கிரமசிங்கவைப்...
“முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சில வாரங்களுக்கு முன்னர் பதவி விலகியிருந்தால், அவர் தலைமறைவாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கமாட்டார்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவளிக்கும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. இதனை உறுதிப்படுத்தினார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்றக் குழு இன்று...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கருத்து சர்ச்சைக்குரியது. அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக இருந்தாலும் அரசமைப்பை இஷ்டப்படி வியாக்கியானம் செய்யக் கூடாது; செய்ய...
மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி – நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெல்லிக்காட்டு பிரதேசத்தைச் சேர்நத 73 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான அழகிப்போடி...
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க வெளிநாடுகள் உதவ வேண்டும் என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ரணில் இன்று பிரதமர் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே,...
“முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சக்களைக் காப்பாற்றவே நான் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர். ராஜபக்சக்களைக் காப்பாற்றுவது எனது நோக்கம் அல்ல என்பதை குறித்த எம்.பிக்களிடம் கூறிவைக்க...
இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும்...
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்பின் 21 ஆவது திருத்தத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை கொண்டதாக 21 ஆவது அரசமைப்பு...
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது....
“அரசில் இருந்து விலகிய 10 கட்சிகளும், தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாகச் செயற்படத் தீர்மானித்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கமாட்டோம்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச...