“ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா உள்ளது எனப் பலரும் கூறுகின்றார்கள். நாங்கள் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளவில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்....
“தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ளக் கூடியவர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. எனவே, அவருடன் பேச்சு நடத்தி, தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்கப்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
காலை 10.30 இற்கு ஈகைச்சுடரேற்றல் மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணி ஒலி எழுப்புதல் “இன்றுவரை நீதி வழங்கப்படாத முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளைமறுதினம் (மே 18) புதன்கிழமை காலை 10.30 மணிக்கு...
மே மாதம் 18ஆம் திகதியன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒருங்கிணைந்து இலங்கை மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவு, இந்தியப்...
இலங்கையின் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டு பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் உண்மையான நிலைமைகள் மற்றும் நெருக்கடிக்குத்...
புதிய அரசை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே...
இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளை நினைவேந்தும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வார நிகழ்வு யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை – முனைப் பகுதியில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மாலை 4 மணியளவில் இந்த...
வவுனியா சிறையிலிருந்து இன்று 3 கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 35, 45 மற்றும் 63 ஆகிய வயதுகளையுடைய 3 கைதிகளே இவ்வாறு விடுதலைசெய்யப்பட்டனர். வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர்...
நிட்டம்புவையில் கடந்த 9ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம்...
கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று...
இலங்கையில் நாளை திங்கட்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். #SriLankaNews
யாழ்ப்பாணம், சங்குவேலியில் மாமரத்தில் ஏறி கிளை வெட்டியவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மானிப்பாய், சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது 48) என்ற 6 பிள்ளையின் தந்தையே...
நாட்டின் நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்கான தகைமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தனியார் வானொலி ஒன்றுக்குக் கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்....
டீசல் இன்மையால் நாடு முழுவதும் பஸ் சேவைகளை பத்து வீதமாகக் குறைக்க நேரிட்டுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து டீசல் கிடைக்காவிடத்து நாளை முதல் தனியார் பஸ்கள் சேவையில் இருந்து...
இலங்கையில் இன்று மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெசாக் தினத்தை முன்னிட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய குறித்த தினங்களில்...
நாடாளுமன்றத்தின் கீழ் அமைக்கப்படும் சட்ட மறுசீரமைப்புக் குழுவுக்குத் தலைமை தாங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும்...
“நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை. போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு. அதை எவரும் தடுக்கவே முடியாது.” – இவ்வாறு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரும் அரசுடன் இணைந்துகொள்ளமாட்டார்கள் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியுன் சங், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். இன்று பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் அமெரிக்கத் தூதுவருடன் சந்திப்பு...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார். “எமது கட்சியில் நான் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன். இந்நிலையில்,...