உலகின் மிகப்பெரிய விமானமான சரக்கு விமானமான Antonov An-225, Kyiv அருகே Hostomel (Gostomel) விமான நிலையத்தில் இரண்டாவது வான்வழி தாக்குதலில் ரஷ்ய துருப்புக்களால் அழிக்கப்பட்டது. இதனை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் செய்மதி படங்களும் வெளியாகியுள்ளன....
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடையே இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது...
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெறும் இசை கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட்...
பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடைமுறை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு...
மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு தற்போதைக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை அடுத்த ஒரு வாரத்திற்கு...
பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலையின் இலவச கல்வி அமைப்பு சம்பந்தமான கலந்துரையாடலும் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் வைபவமும் நேற்றையதினம் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இ – கல்வி தொண்டு நிறுவன நிறுவுனர்...
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஸ்யாவின் 8க்கும் மேற்பட்ட போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி உக்ரைன் பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ரஸ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ரஸ்யா மீது அமெரிக்கா,...
உக்ரைன் லுஹான்ஸ்க் மாகாணத்தின் ரஷ்ய பிரிவிணைவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது தயாராக இருந்த உக்ரைன் ராணுவம் ஷ்சாஸ்டியா நகரத்தின் மீதான தாக்குதலை முறியடித்துள்ளது. உக்ரைனில் இன்று அதிகாலை 5 மணியளவில் உக்ரைனின் மாநில எல்லையான...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த...
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின்...
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ வீதியில் வீட்டு வேலையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வீட்டின் உரிமையாளர் மீது சாடியால் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில்...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்க ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இலங்கையின் கலாச்சாரங்கள் அடையாளங்கள் என்பவற்றை அறிவதற்காக தான் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை...
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார் இன்று கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில்...
உரும்பிராயில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று இரவு 11.30 புகுந்த திருடர்கள் பல லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நிலையில் சுமார் 12 மணித்தியாலங்களுக்குள் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார்...
இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு அரசாங்க அமைச்சர்களே சாட்சியென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்...
வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரியும் நிரந்தர நியமனம் வழங்கக்கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர்...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி, யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்திற்கு அருகாமையில் நேற்றையதினம் (19) மோட்டார் சைக்கிளும் மாட்டு வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...
மக்கள் சந்திப்பு நாட்களில் ஆளுநர் எங்கு செல்கின்றார் என முன்பள்ளி ஆசிரியர்கள் கேள்வியெழுப்பிள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் சம்பள அதிகரிப்பை கோரியும் , நிரந்தர...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு இன்றையதினம் யாழ்ப்பாணம் – கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால...