money
ஜோதிடம்பொழுதுபோக்கு

செல்வம் பெருக வேண்டுமா..?: நாளை இதைக் கண்டிப்பாக செய்யுங்க…

Share

குபேரருக்கு பண கஷ்டம் வந்தபோது லட்சுமி தேவியின் கைகளால் வரத்தினை வாங்கிய நாள் இந்த ஐப்பசி மாத அமாவாசை தினம்.

இந்த நாளில் நாம் லட்சுமி தேவியை வணங்கினால் நமக்கும் குபேர சம்பத்து கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தன்று மாலை 6 மணிக்கு வீட்டில் லட்சுமி குபேர பூஜையை செய்யலாம்.

லட்சுமி தேவியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் வீட்டில் குபேர தீபம் இருந்தால், குபேரருக்கு முன்பு குபேர தீபத்தை ஏற்றுங்கள்.

குபேரனுக்கு முன்பாக ஒரு தாம்பூலத்தட்டில் சில்லரை காசுகளை பரப்பி வைத்து உங்களால் முடிந்த பாலினால் செய்யப்பட்ட இனிப்பு நிவேதியத்தினை லட்சுமி தாயாருக்கு வைத்து மனதார உங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும்.

பணக்கஷ்டம் தீர்ந்து வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

லட்சுமி குபேர பூஜைசெய்வதால் ஏற்படும் நன்மைகள்

சந்தர்ப்பம் அமையும்போது இந்த லட்சுமி குபேர பூஜையைத் தொடர்ந்து செய்துவருவதால் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும்.

வீட்டில் தானிய வகைகள் நிரம்ப இருக்கும். உத்தியோகம், ஊதிய உயர்வு கிடைக்கும்.பணவரவு அதிகரிக்கும். கிடைத்த செல்வம் பெருகி பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.

பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும். தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்கு முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் பெருகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 12 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.05.2025 விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 29, திங்கட் கிழமை, சந்திரன் துலாம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 08 மே 2025 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (மே 8, 2025 வியாழக் கிழமை) இன்று சந்திரன்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 07 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...