இன்றைய ராசி பலன் 23.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஜூன் 23, 2024, குரோதி வருடம் ஆனி 9, ஞாயிற்று கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள சேர்ந்த ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டிய நாள். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும். இன்று உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை சற்று மோசமாக இருக்கும். வேலை தொடர்பாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் மன வருத்தம் ஏற்படும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக சில தடைகள் எதிர்கொள்ள நேரிடும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று குழந்தைகள் அல்லது உடன் பிறந்தவர்களின் மூலம் சில நல்ல செய்திகள் கேட்பீர்கள். குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் விஷயத்தில் கவனம் தேவை. இன்று பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைகிறது. சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள், பலன்கள் கிடைக்கும். சில புதிய முயற்சிகள் வெற்றி தரும். பணியிடத்திலே உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். இன்றைய விலை உயர்ந்த பொருட்கள், சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள், கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வெற்றி உண்டாகும். இன்று தேவையற்ற செலவுகளை சந்திக்கும் நேரம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். அதனால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். உங்களின் வருமான வாய்ப்புகள் உயரும். திடீரென்று பெரிய தொகை உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் தொடர்பான திட்டங்கள் நல்ல லாபத்தை தரும்.இன்று உடல் நல பிரச்சனையில் கவனம் தேவை. பிறருக்கு உதவுவதில் ஆர்வம் காட்டவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நலம் மற்றும் உணவு விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். போட்டி தேர்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். இன்று நிலுவையில் உள்ள வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். உங்கள் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்களின் வேலை, தொழிலுக்கு சாதக பலனை தரும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சந்தையில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எந்த ஒரு ஆக்கப்பூர்வமான வேலைகளிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். இன்று குடும்பத்தில் கோபத்தை கட்டுப்படுத்தி அனுசரித்து செல்ல வேண்டிய நாள். மாணவர்கள் படிப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பணம் விஷயத்தில் அக்கறை தேவை.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்கள் பேச்சுக்கு பிறரின் ஆதரவும், மரியாதையும் கிடைக்கும். நண்பர்களின் வட்டாரம் அதிகரிக்கும். இன்று உங்களின் ஆரோக்கியம் பிரச்சினையை தரக்கூடியதாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயத்தில் புதிய வருமான வழிகளை பெறுவீர்கள். புதிய திட்டங்கள் முன்னேற்றத்தை தரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோர் மூலம் அன்பையும், பரிசு கிடைக்கும். மாலையில் நண்பர்களே சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தின் ஆதரவு எந்த ஒரு செயலையும் நம்பிக்கை எதுவும் செய்ய உதவும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லாவிட்டால் பாதகமான சூழ்நிலை சந்திக்க நேரிடும். உங்களின் செல்வம், மரியாதை, புகழ் கூடும். குழந்தையின் எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகள் இருப்பீர்கள். அதற்கான சேமிப்பில் இறங்குவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிறரிடம் சிக்கி உள்ள பணத்தை மீட்க முடியும். நீதிமன்ற வழக்குகள் சாதக பலனை தரும். உங்களின் வெற்றியை தடுக்க முயலும் எதிரிகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். இன்று பணியிடத்தில் சில மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். பெற்றோர்களிடம் அனுசரித்துச் சொல்லவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். நெருப்பு, மின்சாரம் என எந்த ஒரு ஆபத்தான வேலைகளிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் தொழில், வியாபாரத்தில் சாதகமான பலனை பெறலாம். இன்று உங்களின் நிதிநிலை மும்பை விட வலுவாக இருக்கும். உங்களின் தொழில் தொடர்பாக அனுபவம் உள்ளவர்களின் கருத்துக்களை கேட்பது நல்லது. இன்று ஆன்மீக விஷயத்தில் ஈடுபடுகிறார்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் உல்லாசமாக நேரத்தை செலவிடுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று இன்று எதிலும் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. அது தொடர்பாக அதிக பணம் செலவழிக்க நேரிடும். இன்று உங்கள் செயலில் பொறுமையும், விவேகமும் அவசியம். சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பான விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம். ஆவணங்களை இருமுறை சரி பார்ப்பது அவசியம். இன்று உங்கள் உறவினர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தடைப்பட்ட பணிகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். வாகனம், வீடு வாங்குதல் தொடர்பான முயற்சிகள் முன்னேற்றம் அடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் தொழில், வணிகம் முன்னேற்றம் அடையும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும்.
- 1rasi palan today
- daily palan
- futured
- indraya rasi palan
- latest news today
- nalaiya rasi palan
- raasi palan
- raasi palan sun tv today
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- sun tv today rasi palan
- tamil news today
- tamilnadu news today
- today news tamil
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- today rasi palan in tamil sun tv
- today rasipalan
- today sun tv rasi palan