WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 9
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (26.04.2022)

Share

Medam

medam

மேல் அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவி கிடைக்கும்.

கையில் இருக்கும் பணத்தை நிலத்தில் போடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். பணவரவு தாராளமாக இருக்கும்.

வெளிநாட்டுப் பயணங்களால் வருமானம் பெறுவீர்கள். வங்கியில் கையிருப்பு உயரும்.

 

Edapam

edapam

 

வரவேண்டிய பணம் கிடைத்து அசையாச் சொத்து வாங்குவீர்கள். இதற்கு முன் மனதை அழுத்திய சங்கடங்கள் விலகும். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு அலைச்சல் குறையும்.

பணிச்சுமை விலகி தொழிலாளர்கள் மலர்ச்சியோடு இருப்பார்கள்.

வாகனங்கள் வாங்குவீர்கள். வீட்டைப் புதுப்பிக்கும் வேலையும் நடக்கும். லாபத்தோடு வியாபாரம் செய்வீர்கள்.

 

Mithunam

mithunam

 

சொன்ன சொல்லைக் காப்பாற்றி நெஞ்சை நிமிர்த்தி நிற்பீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வாங்குவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும்.

பிள்ளைகள் விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். வங்கியில் இருந்து எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

அதனால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சிந்தித்து செயல்படுவீர்கள்.

 

Kadakam

kadakam 1

 

வருமான தடையால் நிம்மதியற்ற நிலையை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதம் இல்லாமல் வேலை செய்யுங்கள்.

வியாபாரத்தில் அதிக லாபம் பார்க்க முடியாது. வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும்.

சிலரின் தூண்டுதலால் தவறான காரியத்தில் இறங்குவீர்கள். கணவன் மனைவி உறவில் பிணக்கு உண்டாகும்

 

Simmam

simmam

 

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். திடீர் தன வரவுகள் பண சுமையை குறைக்கும். குடும்ப நலனுக்காக புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.

உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். நிதி நிறுவன முதலீடுகள் சங்கடத்தைக் கொடுக்கும்.

குறுக்கு வழியில் செல்வதை தவிர்த்து விடுங்கள். உடலை வாட்டிய நோய்கள் விலகும். குடும்ப நலனுக்காக கையிருப்பு கரையும்.

 

Kanni

kanni

என்னதான் தவிர்க்க முயன்றாலும் சின்ன சின்ன தொல்லைகளை அனுபவிப்பீர்கள். தடைபட்ட வருமானம் சரளமாக வரத் தொடங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் நிலைக்கு உயர்வீர்கள்.

அரசுப் பணியாளர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளால் நிம்மதியற்ற நிலை உருவாகும்.

தொழில் துறைகள் ஏற்றம் இறக்கமாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர்கள்.

 

 

Thulaam

thulaam

 

தொழிலை அவசரப்பட்டு விரிவுபடுத்த வேண்டாம். ஆன்லைன் வியாபாரத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம்.

எந்த ஒரு செயலாக இருந்தாலும் நிதானித்து செய்யுங்கள். உறவினர்கள் வருகை வீட்டை கலகலப்பாக்கும்.

நெருக்கடிகளைத் தாண்டி வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கூட்டுத்தொழில் பிரச்சினையை சந்திப்பீர்கள்.

 

Viruchchikam

viruchchikam

தாய்வழி சொந்தத்தில் தனலாபம் பெறுவீர்கள். கால்நடைகள் மூலம் ஆதாயமடைவீர்கள். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். புதிய வீடு பற்றிய கனவு நனவாகும்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உறவு பலப்படும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும்.

உடலை வருத்திய நோய் அகலும். சுயதொழில் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள்.

 

Thanusu

thanusu

 

புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வீர்கள். கஷ்டப்பட்டாவது சுப காரியங்களை நடத்துவீர்கள்.

வருமானத்திற்காக இடம் விட்டு இடம் மாறுவீர்கள். அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.

ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஜோதிடர்கள் மேன்மையடைவார்கள். ஊழியர்களுக்கு வேலையில் இருந்த சங்கடங்கள் அகலும்.

 

Magaram

magaram

மடை திறந்த வெள்ளம் போல் தடை கடந்து தனலாபம் கிடைக்கும். பிள்ளைகள் மூலமாக சந்தித்த பிரச்சனை விலகும்.

பொறியியல் கணிதம் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடுமையாகப் போராடி தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

 

Kumbam

kumbam

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். அடிக்கடி மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் எதிர்விளைவுகளை சந்திப்பார்கள்.இயந்திர வகை தொழிலில் ஈடுபட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

போட்டியாளர்கள் தரும் எதிர்ப்புகளை தாண்டி வெற்றி நடை போடுவீர்கள்.

உறவுகளால் தேவை இல்லாத பிரச்சனைகள் உருவாகும். அரசு பணியில் இருப்பவர்கள் செல்வாக்கு பெறுவார்கள்.

 

Meenam

meenam

முடிவு எடுப்பதில் தடுமாற்றம் அடைவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வண்டி வாகனங்களுக்கு செலவு செய்வீர்கள்.

கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என்ன பிரிவு நிலை உண்டாகும். வேலை மாறுதல் கடன் காரணமாக சில சொத்துக்கள் கை மாறலாம்.

மூட்டு வலி கழுத்து வலி என சிலர் அவதிப்பட நேரலாம்.பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்

 

.#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 3
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 23 மே 2025 : சரஸ்வதி யோகத்தால் செயல்பாடுகள் சிறக்கும் ராசிகள்

மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும்....

tnadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 22 மே 2025 : Daily Rasi Palan

இன்றைய ராசிபலன் 22.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 8, வியாழக் கிழமை, சந்திரன் கும்பம்...

tnadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 21 மே 2025 – இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க பேச்சில் இனிமை தேவை

இன்றைய ராசிபலன் 21.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 7, புதன் கிழமை, சந்திரன் கும்பம்...