WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 8
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (24.04.2022)

Share

Medam

medam

தாமதமான காரியம் உடனே நடக்கும். அரசாங்க வேலைகளுக்கு அப்ளிகேஷன் போடுங்கள். வங்கித் தேர்வுகள் வெற்றியைத் தரும்.

ஊழியர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள். தடுமாற்றத்தில் இருந்த தொழில் நிலைத்தன்மை பெறும்.

இடையூறுகளைத் தாண்டி வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். வெளியூர் வேலைகள் குறித்த நேரத்தில் முடியும்.

 

Edapam

edapam

 

குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் மறையும். பழுதான மின்சார சாதனங்களை ரிப்பேர் செய்வீர்கள். தொழிலுக்காக வங்கியில் கேட்ட பணம் கைக்கு வந்து சேரும்.

விட்டுப் போன உறவுகள் வீடு தேடி வரும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் செல்வீர்கள்.

குழப்பமான மனநிலை மாறி தெளிவு பிறக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.

 

Mithunam

mithunam

 

வெட்டித்தனமாக பேசுவதை விட்டுத் தள்ளுங்கள். மனைவியுடன் மல்லுக்கட்டினால் பெட்டி படுக்கையோடு பிறந்த வீட்டுக்கு போய்விடுவார்.

வீடு பூட்டி இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இரண்டு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.

வண்டி வாகனங்களை செல்போன் பேசிக்கொண்டே ஓட்டாதீர்கள்.சகோதர சகோதரிகள் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

Kadakam

kadakam 1

 

நீண்ட நாள் பகை விலகி உறவுகள் பலப்படும். சாதுர்யமாகப் பேசி மனைவியை சமாளிப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். தக்க நேரத்தில் கிடைக்கும் உதவி பக்கபலமாக இருக்கும்.

வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீர்கள். வெளியூர் கடிதங்களில் நல்ல செய்தி வரும்.

 

Simmam

simmam

ஒதுங்கி போனாலும் எதிர்ப்புகள் பதுங்கிப் பாயும். மனத்திண்மையால் அதை முறியடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற கடினமாக உழைக்க வேண்டும்.

அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். கொடுத்த கடன் வருவதில் தாமதமாகும். வியாபாரம் சற்று மந்தமாக நடக்கும்.

மெடிக்கல் ஏஜெண்டுகள் புதிய ஆர்டர்களை பெறுவார்கள். அலைச்சல் அதிகமானாலும் ஆதாயம் குறையாது.

Kanni

kanni

ஏதோ ஒரு மனக்கவலை இரவுத் தூக்கத்தைக் கெடுக்கும். எடுத்த காரியம் சுலபத்தில் முடியாது. அடுத்தவருக்கு செய்தால் உடனே நடக்கும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் நிலவும். வேலைப்பளு அதிகரிக்கும். நடைபாதை வியாபாரிகள் சிரமத்தை எதிர்நோக்கு வார்கள்.

வெட்டி அலைச்சல், வீண் செலவு. பிள்ளைகளின் படிப்புச் செலவும் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை உண்டாகும்.

 

Thulaam

thulaam

 

பல வழிகளில் உங்களுக்கு வருமானம் வரும். வாகனங்களுக்கு வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும்.

பிரிக்கப்படாமல் இருந்த பொதுச் சொத்துக்களில் உங்கள் பங்கு கிடைக்கும். தோட்டப் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தென்னந்தோப்பை சீர்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு கல்வி கற்கண்டைப் போல் இனிக்கும்.

Viruchchikam

viruchchikam

பழைய நண்பர்களின் வருகையால் வீடு குதூகலிக்கும். மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்குவீர்கள். சில வீடுகளில் திருமணப் பேச்சுவார்த்தை நடக்கும்.

வியாபாரம் பல வழிகளில் முன்னேற்றம் அடையும். தொடர்ச்சியாக வெளியூர் பயணங்கள் அமையும்.

தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். சகோதர சகோதரிகள் உங்களை அன்பால் திணறடிப்பார்கள்.

Thanusu

thanusu

 

தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். ஏழை எளியோருக்கு உதவுவீர்கள். வெளி வட்டாரங்களில் உங்களின் புகழ் பரவும்.

எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் தொழிற்சாலையில் லாபம் பெருகும்.

விடாமுயற்சியால் வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

 

Magaram

magaram

வாகனங்கள் பழுதாகி செலவு வைக்கும். திடீர்ச் செலவுகள் வந்து பாடாய்படுத்தும். மனைவி மக்களின் ஆசையை நிறைவேற்ற ஆடம்பரமாக செலவு செய்வீர்கள்.

வரவுக்கு மேல் செலவு அதிகமாகும்.கடன் வாங்கி சில காரியங்களை செய்ய வேண்டியிருக்கும். வேலை இடங்களில் பணிச்சுமை அதிகரிக்கும்.

வியாபாரம் சுமாராக நடக்கும். அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டுவீர்கள்.

 

 

Kumbam

kumbam

வாகனங்களில் போகும்போது அலட்சியம் காட்டாதீர்கள். மோட்டார் சைக்கிளில் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். ஞாபக மறதி அதிகமாகும்.

எந்த இடத்தில் எதை வைக்கிறோம் என்பதை மனதில் பதிய வையுங்கள்.யாருக்கு கடன் கொடுத்தாலும் தொகையையும் தேதியைட மறக்காமல் குறித்து வையுங்கள்.

சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுத்தடிக்கும்.

Meenam

meenam

பங்குச்சந்தையில் முதலீடு செய்தீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல முறையில் நடக்கும். வாங்கிப்போட்ட நிலங்கள் நல்ல விலைக்கு விற்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

எதிர்பாராத இடத்திலிருந்து உதவி தேடி வரும். வேலை இடங்களில் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

குளிர் பிரதேசங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்.

 

 

.#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...