WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 1
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (10.04.2022)

Share

Medam

medam

வீடு கட்டுவதற்காக திட்டம் போடுவீர்கள். அன்னையின் பூரண ஆசி உங்களுக்கு உண்டு.

தொழில் துறைகளை விரிவுபடுத்த நண்பர்கள் உதவி செய்வார்கள். நிலத்தில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

சின்ன வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். சரளமாக கையில் பணம் புரளும்.

 

Edapam

edapam

 

இது உங்களுக்கு முன்னேற்றமான நாள். நீங்கள் எதிர்பார்த்த பலன் வீடு தேடி வரும்.

எந்த எதிர்ப்பு வந்தாலும் உங்களின் மன உறுதியால் அதை முறியடிப்பீர்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வீர்கள்.

சீரான போக்கு தொழிலில் காணப்படும். பங்கு பரிவர்த்தனைகள் சிக்கலை எதிர்நோக்கும்.

போட்டி பந்தயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும்.

 

 

Mithunam

mithunam

வாக்கு வன்மையால் எதிராளியை திணரடிப்பீர்கள்.நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

மங்கல காரியங்களுக்கு பேச்சுவார்த்தை நடக்கும்.பிள்ளைகள் பெற்றோர்களுக்கு பெருமை தேடித் தருவார்கள்.

வியாபாரத்தில் புதிய நுணுக்கத்தை கடைப்பிடிப்பீர்கள். அரசியல்வாதிகள் மக்களின் செல்வாக்கை பெறுவார்கள். வெளியூர் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

 

 

Kadakam

kadakam

எந்தக் காரியமாக இருந்தாலும் எச்சரிக்கை தேவை. எதிலும் இஷ்டப்பட்டு கஷ்டப்படாதீர்கள். அருவிபோல் தொழில்கள் அப்படியே நடக்கட்டும்.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். வாக்குத் தவறினால் தலை குனிவு ஏற்படும். கடன் சுமை கொஞ்சம் கையை கடிக்கும்.

குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். சலசலப்புகள் சங்கடங்களை ஏற்படுத்தும்.

 

 

Simmam

simmam

கடுமையாகப் போராடி காரியம் சாதிப்பீர்கள். அடுத்தவர்களை நம்பி எந்த வேலையும் செய்ய வேண்டாம்.

மனைவியை மகிழ்ச்சிப்படுத்த அன்பாக நடந்து கொள்ளுங்கள். வெளியில் உள்ள பிரச்சனைகளை வீட்டுக்குள் கொண்டு வர வேண்டாம்.

தொழில் சுமாராக நடக்கும். பங்குச்சந்தை கண்ணாமூச்சி காட்டும். பிள்ளைகளின் போக்கை கண்காணியுங்கள்.

 

                                                                                                                                                                                                   Kanni

kanni

பணப்பற்றாக்குறை பையை விட்டு அகலும். திடீரென்று பணம் வர வாய்ப்பு உண்டு. தொழில்துறைகள் மேன்மையுடன் காணப்படும்.

காய்கறி வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவார்கள். இல்லத்தரசிகள் கணவனை இம்சைப்படுத்த மாட்டார்கள்.

பிள்ளைகளும் மனதுக்கு இதமாக நடப்பார்கள். வம்பு வழக்குகள் வந்த வழியே ஓடும். கையில் பணம் புரளும்.

 

                                                                                                                                                                     

                                                                                                                                                                  Thulaam

thulaam

 

பெரிய மனிதர்களின் ஆதரவு அரிய காரியங்களை செய்ய வைக்கும். சிலர் விருந்தினர்களாக செல்வார்கள்.

சிலருக்கு விருந்தினர்கள் தேடி வருவார்கள். எதிர்பார்த்ததைவிட தொழில் ஏற்றமுடன் நடக்கும்.

நில விற்பனையில் ஆர்வம் காட்டுவீர்கள். உபரி பாக விற்பனை உச்சத்தை தொடும்.

எதிர்பார்த்த நல்ல செய்தி வெளிநாடுகளில் இருந்து விரைந்து வரும்.

 

                                                               

                                                                                                                                                                         Viruchchikam

viruchchikam

 

நேற்று இருந்த நிலை மாறி இன்று நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். தடைபட்ட காரியங்கள் இலகுவாக நடக்கும்.

தொழிலில் புதுமையான உத்திகளை கையாளுங்கள். வியாபாரிகள் உற்சாகத்தில் திளைப்பார்கள்.

மனைவி மக்கள் உங்கள் மனதை புரிந்து நடந்து கொள்வார்கள். நீண்ட தூரம் பிரயாணம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

 

Thanusu

thanusu

 

நீங்கள் வேகமான ஆள்தான். ஆனால் நேரங்காலம் ஒத்துழைக்க வேண்டுமே. இப்பொழுது நிதானம் தேவை.

வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். ஒப்பந்தப் பத்திரங்கள் போடுவதை ஒத்தி வையுங்கள். கணக்கு வழக்குகளில் கவனமாக இருங்கள்.

வேடிக்கைப் பேச்சு கூட வினையாக முடியும். வீட்டில் உங்கள் கருத்தை திணிக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள்.

 

Maharam

magaram

 

சுறுசுறுப்பாக தொழில் நடக்கும். பணத்தைச் சேமிப்பதில் கவனம் செலுத்துங்கள். வில்லங்கமான வியாபாரங்கள் வேண்டாம்.

பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று செய்ய வேண்டிய காரியத்தை நாளைக்கு ஒத்தி வைக்காதீர்கள்.

விறுவிறுப்பான வியாபாரம் பழைய கடன்களை அடைக்கும். செல்லும் இடங்களில் செல்வாக்கு பெறுவீர்கள்.

 

Kumbam

kumbam

சின்ன சின்ன வியாதிகள் சிக்கலை தரலாம். கற்பனையால் மனம் குழம்பி உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். நடக்கின்ற வியாபாரம் நடக்கும்.

கிடைக்கின்ற லாபம் கிடைக்கும். அதிக ஆசை அவஸ்தையை கொடுக்கும். செய்கின்ற உதவிகள் கூட உபத்திரவம் ஆக மாறும். எதிர்ப்புகளை கண்டு அச்சப்படாதீர்கள்.

தானாக மறைந்து போகும். பணவரவு மந்தமாக இருக்கும்.

 

Meenam

meenam

கொடுத்த வாக்கை காப்பாற்ற கடும் முயற்சி செய்வீர்கள். திறமையுடன் காரியங்களை செய்து தேவையானதை பெறுவீர்கள்.

ஆன்மீகத்தில் மனம் அதிகம் நாட்டம் கொள்ளும். திருத்தல யாத்திரைகள் செல்வீர்கள். வியாபாரம் சரளமாக நடக்கும்.

பங்குச் சந்தையில் அதிக லாபம் பார்க்க முடியாது. பிள்ளைகளின் உடல் நலம் மனக் கிலேசத்தை உண்டு பண்ணும்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilnaadi 2
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 மே 2025 – Daily Horoscope

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

tamilnaadi 2
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 13..05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 30, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 12 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.05.2025 விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 29, திங்கட் கிழமை, சந்திரன் துலாம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 08 மே 2025 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (மே 8, 2025 வியாழக் கிழமை) இன்று சந்திரன்...