Medam
மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் இடம்பெறும்.
நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும். பண வரவு அதிகரிக்கும். சுப செலவுகளும் ஏற்படும்.
பணியிடத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
Edapam
எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதமாகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
திட்டமிடும் காரியங்களை நிதானத்துடன் செயற்படுங்கள். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக அமையும்.
செலவுகள் அதிகரிக்கும். பெற்றோர் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.
Mithunam
எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். மனக்குழப்பம் தீர்ந்து மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
நினைத்த காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.
நண்பர்கள் உதவியால் நன்மை உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்த்த அழைப்பு வரும்.
Kadakam
சோம்பலாகவும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். மனதில் குழப்பம் ஏற்படும்.
புதிய முதலீடுகளை திட்டமிடும் பொது சிந்தித்து திட்டமிடுங்கள். பெரியவர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.
வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். நெருங்கிய உறவினரால் மனதுக்கு அமைதி கிடைக்கும்.
Simmam
பணக் கொடுக்கல் வாங்கல் திருப்தியாக காணப்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.
நீண்ட நாள் இழுபட்ட பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
நினைத்த காரியம் தடங்கலின்றி நிறைவேறும். வழக்கு விசாரணைகள் உங்களுக்கு சாதமாக அமையும்.
Kanni
உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடன்பிறப்புக்களால் நன்மை உண்டாகும்.
புதிய நகைகள், வீடு வாங்குவீர்கள். அலைச்சல் முடிவுக்கு வந்து எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
பதவி உயர்வு கிடைத்து வெளியூர் செல்விர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும்.
Thulaam
பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
ஆன்மிக வழிபாடுகளில் அக்கறை செலுத்துவீர்கள். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வீர்கள்.
செலவுகள் அதிகரித்தாலும் நினைத்த காரியம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
Viruchchikam
கடன்கள் வசூலாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள்.
குடும்பத்தாருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். மனதில் புது உற்சாகம் கிடைக்கும்.
சொத்து பிரச்சினைகளில் இருந்த குழப்பம் நீங்கும். புதியவர்கள் அறிமுகம் கிடைக்கும்.
Thanusu
சுப செலவுகள் அதிகரிக்கும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய திருப்பம் உண்டாகும்.
வியாபாரத்தில் காணப்பட்ட போட்டி பொறாமைகள் நீங்கும். உறவினர்களால் சுப காரியங்கள் உண்டாகும். அனுகூலமான நாள்.
Maharam
அவதானத்துடனும் கவனத்துடனும் செயற்பட வேண்டிய நாள். எந்த செயல்களை செய்தாலும் நிதானத்துடன் செயற்படுங்கள்.
வாகன பயணங்களின் போது எச்சரிக்கையுடன் செல்லுங்கள். அடுத்தவர் விடயத்தில் தலையிடாமல் இருங்கள்.
வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
Kumbam
நெருங்கிய நண்பருடன் ஆரம்பிக்கவிருந்த தொழில் சிறப்படையும். ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.
பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அதிஷ்டமான நாள்.
Meenam
பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாள் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தோருக்கு திருமணம் கைகூடும்.
பணியிடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
உற்சாகமான நாள். வெளிநாட்டு பயணம் சாதகமாகும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.
#Astrology
Leave a comment