aa 2 scaled
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (23.09.2021)

Share

Medam

medamஇன்று மகிழ்ச்சி கூடுதலாகும். தந்தை வழி உறவுகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். சிலUக்கு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும். உணவு விடயத்தில் கவனத்தை கையாளவும். உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். பொறு மையை கடைப்பிடியுங்கள். பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். முருகப் பெருமானை வழிபட மகிழ்ச்சி பிறக்கும். ஆபரண சேர்க்கை உண்டாகும்.  முயற்சிகளுக்கு பலன் கிட்டும்.

Edapam

edapamபுதிய முயற்சிகள் சாதகமாக அமையும் சகோதரர்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்கின்றமையைத் தவிர்க்கவும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.  வியாபாரத்தில் உங்கள் சாமர்த்தியத்தால் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

Mithunam

mithunamகொடுக்கல் வாங்கல் விடயத்தில் கவனமாக இருக்கவும் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உதவுவார்கள். தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். புதிய பணியாளர்களின் அறிமுகம் உற்சாகம் தரும்.

Kadakam

kadakam 1இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயலாற்ற வேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிருங்கள். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடித்தால் நன்று. வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லுங்கள்.  பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

Simmam

simmamபுதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயற்படுங்கள்.. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கப்பெறும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமை காரணமாக உடல் ஆரோக்கியம் பலவீனமடையும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

Kanni

kanniஅனுகூலமான நாளாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவிகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே உங்கள் மீதான மரியாதை உயரும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். இன்று அம்பிகையை வழிபட நற்பலன்கள் உண்டாகும்.

Thulaam

thulaamமனதுக்கு மகிழ்ச்சி தரும் சுபநிகழ்வுகள் நடைபெறும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு அதிகம். தாய் வழி உறவுகளால் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் உண்டாகும். மன உறுதியுடன் செயற்படுவீர்கள். தெளிவாகச் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனதுக்கு அமைதி கிடைக்கும்

Viruchchikam

viruchchikamஎதிர்பார்த்த பணவரவு உண்டாகும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது வீண்வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடப்பது நன்மை தரும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் அதிகரிக்கும்.

Thanuchu

thanusuமகிழ்ச்சியான நாள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக செயற்படுவீர்கள். பிள்ளைகள் கேட்பதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவு உண்டாகும். சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். விஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Maharam

magaramதொடங்கும் காரியங்கள் சாதகமாகும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பிலுள்ள பணம் குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாக்கினால் பிரச்சினைகள் வரக்கூடும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. வியாபாரத்தில் மனஸ்தாபம் ஏற்படும். பொறுமை அவசியம். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

Kumbam

kumbamபுதிய முயற்சிகளை தொடங்கவும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெரியோரின் ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். இன்று விநாயகரை வழிபட மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக நிறைவேறும்.

Meenam

meenamபோட்டிகள் குறையும். முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் நன்மை உண்டாகும். வெளியிடத்தில் செல்வாக்கு உயரும். மந்த நிலைமாறி சுறுசுறுப்புடன் செயற்படுவீர்கள். ஏற்பட்ட தடங்கல்கள் விலகி வெற்றிக்கு வழிவகுக்கும். உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ILLAYARAJA14
ஜோதிடம்சினிமா

எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு...

horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...