ass 1
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (21.09.2021)

Share

Medam

medam

காரியங்கள் சித்தி பெறும். சகோதரர்கள் வழியால் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை உண்டுபண்ணுவார்கள். எதிர்பாரா பணவரவு உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன்களை கட்டி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்டும் வாய்ப்புண்டு. குடும்பப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

Edapam

edapamஉங்கள் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படுவீர்கள். விடாமுயற்சி சிறந்த பலனைத் தரும். நிதானத்துடன் செயற்படுவது நிம்மதிக்கு வழிவகுக்கும். கணவன்– மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் செயற்படுவீர்கள்.தேவையான பணம் கைக்கு கிடைக்கும்.

Mithunam

mithunamகுடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாரா பணவரவு உண்டாகும். சுயதொழிலில் சிறப்படையும். புதிய நண்பர்கள் நட்பு வட்டாரத்தில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சோர்வு நிலை உண்டாக வாய்ப்புண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். நண்பர்கள் அனுசரணையாக செயற்படுவார்கள். வீண் அலைச்சலைத் தவிருங்கள்

Kadakam

kadakam 1

இன்றைய நாள் மனஉளைச்சல் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. எதிர்பாரா செலவுகள் அதிகரித்தாலும் சமாளிக்க பணம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்வர். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பொறுப்புகள் மூலம் அனுகூல பலன்கள் கிடைக்கும்.  முருகப்பெருமான் வழிபாடு வெற்றிகளை அதிகரிக்க செய்யும்.

Simmam

simmam

வரவும் செலவும் இன்றைய நாளில் ஏற்படும். கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயற்படுதல் நன்று. பணியிடத்தில் பணிகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதையும் சமாளித்துவிடுவீர்கள். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பாரா பொருள் சேர்க்கை உண்டாக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும்.

Kanni

kanniஇன்று எதிர்பாரா நன்மைகள் நடக்கும். அற்புதமான நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சக பணியாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எதிலும் வெற்றி அடைவீர்க்ள். உற்சாகத்துடன் செயற்படுவீர்கள். சிலருக்கு திடீர் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. நண்பர்கள் உதவியால் முயற்சி வெற்றியடையும்.

Thulaam

thulaamபுதிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். மற்றவர்களுடன் வீண் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. பேசும்போது பொறுமையைக் கடைப்பிடியுங்கள். முயற்சித்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உண்டாகும் மகிழ்ச்சி ஆறுதளிக்கும். தாய் வழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். இன்று சில அனுபவங்களை கற்றுணர்வீர்கள். உங்கள் பேச்சுக்கு மற்றவர்களின் மதிப்பு கிடைக்கும்.

Viruchcikam

viruchchikamதேவையற்ற அலைச்சல் உண்டாகும். கூடுமானவரை கவனத்துடன் செயற்படுங்கள். சுயதொழிலில் ஆர்வம் உண்டாகும். எந்தவொரு விடயத்தையும் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. மனதுக்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்தி உண்டாகும். உங்கள் யோசனைக்கு குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். அயலர்களால் மதிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணியாளர்களுக்கு பணி சுமாராகவே காணப்படும்.

Thanusu

thanusuதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பொருளாதாரம் ஏற்றத்துடன் இருக்கும் என்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் லாபம் வந்தாலும் அதற்குரிய செலவுகளும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததை சாதிக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது.

Magaram

magaramபுதிய முயற்சிகள் கைகூடும். அநாவசியமான செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தெய்வீக உணர்வு அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனமாக இருங்கள். கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் உண்டாகும். பேசித் தீர்த்துக் கொள்வது நன்று. புதிய பொறுப்புக்கள் கூடும். சுயதொழில் எதிர்பார்ப்பு தடைகள் நீங்கும். வெளியிடத்தில் நன்மதிப்பு உண்டாகும்.

kumbam

kumbamசெலவுகளை சமாளிப்பதில் சிரமப்படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்றோருடன் வீண் வாக்குதத்தில் ஈடுபடாதீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைக் கண்டறிந்து நிறைவேற்றுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்த்துணையை சமாளித்து நடந்துகொள்வீர்கள்.

Meenam

meenamதெய்வீகம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாக சூழ்நிலை உருவாகும். தந்தை வழி உறவுகளால் காரியம் அனுகூலமாக அமையும். குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். எதிர்பாரா செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். வாகன பயணங்களில் கூடுதல் அக்கறை தேவை. மறைமுக எதிரிகளை சமாளிக்க நேரிடும். அதிக உழைப்பைக் கொடுத்து முன்னேறுவீர்கள்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...