WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 10
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (17.05.2022)

Share

Medam

medam

தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என நினைக்கிறீர்களா, இன்று வேண்டாம். கையில் இருக்கும் பொருட்களை பத்திரமாக வைத்திருங்கள்.

அனாவசியமாகச் செலவு செய்ய வேண்டாம். பங்குச்சந்தையில் ஈடுபடாதீர்கள். அடுத்தவரின் ஆசை வார்த்தைக்கு மயங்காதீர்கள்.

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.

 

Edapam

edapam

வெளியூர்ப் பிரயாணங்கள் தொழிலுக்குத் தேவையான வெற்றிகளைப் பெறுவீர்கள். இல்லத்தரசிகள் மூலமாக பணச்சுமை குறையும்.

ஆன்லைன் வர்த்தகங்கள் அதிக லாபத்தைக் கொடுக்கும். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள்.

அரசுப்பணியாளர்கள் ஊக்கத்தொகை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும்.

                                                                                                                                   

 

                                                                                                                                   Mithunam

mithunam

புது நண்பர்களின் சேர்க்கையால் அதிக நன்மை அடைவீர்கள். வியாபாரம் வெற்றிகரமாக நடப்பதால் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு மறைந்து போகும். எதிர்ப்புகளைத் தாண்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

                                                                                                                        Kadakam

kadakam

 

தேவையில்லாத கற்பனையால் மனக்கவலை அதிகரிக்கும். எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள்.

அடுத்தவரின் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீர்கள். சோம்பேறித்தனத்தை விலக்கிவிட்டு சுறுசுறுப்பாக வேலை பாருங்கள்.

அரசு ஊழியர்கள் நேர்மையைக் கடைபிடியுங்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வாழ்த்துப் பெற முயற்சி செய்யுங்கள்.

 

                                                                                                                   simmam

 

simmam

வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பணம் உங்கள் விதியை மாற்றி அமைக்கும். நிலத்தில் போட்ட முதலீடுகள் வருமானத்தைப் பெருக்கி நிம்மதியை தரும்.

வியூகம் அமைத்து தொழிலை நடத்துவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி ஓடும்.

பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் ஏற்றமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் தாராளமாக ஈடுபடுங்கள்.

 

                                                                                                            Kanni

kanni

ஆசையுடன் கேட்ட ஆபரணத்தை வாங்கிக்கொடுத்து மனைவியை ஆனந்தத்தில் ஆழ்த்துவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள்.

நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி பெறுவீர்கள். சகோதர உறவுகளில் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

உங்களுக்கு எதிரான சிந்தனையில் இருந்தவர்கள் கூட உதவி செய்ய முன்வருவார்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

 

                                                                                         Thulaam

thulaam

அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அந்தஸ்தை அதிகரிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை நிலைநாட்டுவீர்கள்.

வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்க அட்வான்ஸ் கொடுப்பீர்கள்.

ஐடி பணியாளர்கள் கடினமான முயற்சியில் வெற்றி காண்பார்கள். பொறுப்பாக வேலை செய்து புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள்.

                                                                                           

                                                                                                            Viruchchikam

viruchchikam

நல்ல பாதையில் நடந்தாலும் பொல்லாத வம்பு வந்து சேரும். வெளியூர்ப் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருங்கள்.

வாகனங்களை நிறுத்தும் போது நன்றாகப் பூட்டி விட்டுச் செல்லுங்கள். அடுத்தவர் விஷயத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தலையிடாதீர்கள்.

யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள்.எதிலும் இரண்டு மடங்கு எச்சரிக்கையுடன் இருங்கள்

 

Thanusu

thanusu

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு நல்ல தீர்வு கிடைக்காது. வேலையிடத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

காவல்துறையினர் கைதிகளை கவனமுடன் கூட்டிச் சொல்ல வேண்டும். அலட்சியமாக இருந்து அவஸ்தைப் படாதீர்கள்.

பைக் ஓட்டும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Maharam

magaram

முறைப்புடன் இருந்த கணவன் மனைவி உறவு இறுக்கமாக மாறும். பெரியோர்களின் நல்லாசி உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.

தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிப்பீர்கள். வெளிநாட்டுக்குச் செல்வதற்கான ஏற்பாடு வெற்றிகரமாக முடியும்.

வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கட்டிடத் தொழிலாளர்கள் எலக்ட்ரீசியன் ஏற்றமான வருமானத்தை அடைவார்கள்.

Kumbam

kumbam

பொங்கிவரும் அருவிபோல் பொருள் வரவு இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கைக்கு வரும். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.

சங்கடங்கள் மறையும்‌. தனியார் துறையிலும் கணிசமான வருமானம் பெறுவீர்கள்.

எதிர்ப்புகளை முறியடித்து வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். உங்களுடைய வார்த்தைக்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள்.

Meenam

meenam

உங்களை வீழ்த்த நினைக்கும் விரோதிகளின் கை ஓங்கும். விடாமுயற்சியால் அதை முறியடிப்பீர்கள்.

எப்பாடுபட்டாவது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் அவமானப்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் வெறும் அலைச்சலைத் தரும்.

அநாவசியமாக யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள். அவஸ்தை உங்களுக்குத்தான். கடன் சுமை அதிகரிக்கும்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
ILLAYARAJA14
ஜோதிடம்சினிமா

எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு...

horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...