ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 19 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share
tamilnaadi 1 scaled
Share

​இன்றைய ராசி பலன் 19 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 19, 2024, குரோதி வருடம் ஆடி 3 வெள்ளிக் கிழமை, சந்திரன் விருச்சிகம், தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள பரணி, கிருத்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வங்கி அல்லது நிறுவனத்தில் கடன் வாங்க நினைப்பவர்கள் இன்று அந்த முயற்சியை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களின் செயலுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அலைச்சல் அதிகமாக இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான புதிய வழிகளை பயன்படுத்துவீர்கள். இன்று உங்களின் முடிவு எடுக்கும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். உங்களின் நிதி நிலைமை சிக்கலில் ஆழ்த்தும். உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். இது உங்களை திருப்திப்படுத்தும். உடல் நலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பிற்கான நற்பலனை பெறுவீர்கள். குழந்தைகள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தாயின் அன்பை பெறுவீர்கள். உங்களின் வசதிக்காக, ஆடம்பரத்திற்காகக் கொஞ்சம் பணம் அதிகமாக செலவழிப்பீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தை சிறப்பு கவனம் தேவை. இன்று உங்களின் உடல் நலனில் அக்கறை தேவை.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டில் சில வாக்குவாதங்கள் ஏற்படும். உங்களின் பேச்சில் கவனம் தேவை. உறவுகளில் மனக்கசப்பு உண்டாகும். நண்பர்களுக்கு உதவும் முன் வருவீர்கள். உங்களின் நிதி நிலைமை சற்று கவலை தரக்கூடியதாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்கும் முயற்சி செய்யவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ஆதாரம் தொடர்பாக சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். உங்கள் பணியிடத்தில் எதிரிகள் இடம் கவனமாக இருக்கவும். சட்டம் தொடர்பான விஷயத்தில் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும். வீட்டில் அன்றாட தேவைகள் தொடர்பாக செலவுகள் அதிகமாகும். ஆன்மிக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு மூன்றுவீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு உகந்த நாளாக இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பிஸியாக இருப்பீர்கள். முக்கிய விஷயத்தில் பணத்தை முதலீடு செய்ய நினைப்பீர்கள். இன்று உங்களின் உரிமை மற்றும் சொத்துக்கள் அதிகரிக்கும். உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலைக்கான முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பம் மற்றும் வேலை தொடர்பாக சில இடையூறுகள் உங்கள் மனக்கவலையை அதிகரிக்கும். வியாபாரம் முயற்சிகள் பலன் கிடைக்க தாமதமாகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் நிதிநிலை மேம்படும். உடல் நலனில் அக்கறை தேவை. வயிறு சம்பந்தமான உபாதைகளால் அவதிப்படுவீர்கள். இன்று உங்களின் உணவு மற்றும் பானத்தில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும். சோம்பலை விடுத்து சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப தேவைக்காக செலவுகள் அதிகமாக செய்ய வேண்டியது இருக்கும். வியாபாரத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். நிலுவையில் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள சாதகமான நாள். இன்று உங்களால் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் தேவைக்காக அலைச்சல் அதிகமாக இருக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று புத்திசாலித்தனமாக, விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். இன்று நிதி நிலை பிரச்சனைகள் தீரும். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களின் வேலைகளை முடிப்பதில் பிறரை நம்ப வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் வேலைகளை முடிக்க திட்டமிட்டு செயல்படவும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகள் தொடர்பான விஷயம் மனக்கவலையைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மாலை நேரத்தில் நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். இன்று உங்களின் கடின உழைப்பிற்கு மரியாதை கிடைக்கும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...