1748967 surya dev worship
ஜோதிடம்

இன்று ஆவணி ஞாயிறு – விரதம் இருந்து சூரிய பகவானை வழிபடுங்கள்

Share

இன்று ஆவணி ஞாயிறு. விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது காலம்காலமாக பேணப்பட்டுவரும் ஐதீகமாகும்.

சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார். அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார். எனவே சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் தமிழர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். வீட்டின் முன்பு வெட்டவெளியில் புதுபானையில் பொங்கல் வைப்பார்கள்.

தை மாத பொங்கல் நிகழ்ச்சி போன்றே இந்த பொங்கலும் நடத்தப்படும். எனவே இந்த பொங்கலை ஆவணி ஞாயிறு பொங்கல் என்று அழைத்தனர்.

ஆவணி ஞாயிறு விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 1 4
ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 27.10.2025

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின்...

15563919 rasipalan
ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 26.10.2025

மேஷம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்....

MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...