ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 17 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan

Share
tamilnaadi 2 scaled
Share

இன்றைய ராசிபலன் : 17 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 17, 2024, குரோதி வருடம் ஆவணி 1, சனிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

நவகிரக தலைவன் சூரிய பகவான் ஆகஸ்ட் 16ம் தேதி கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். சூரியன் ஆட்சி, அதிபதியாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் ஆவணி மாதத்தில் எந்தெந்த ராசியினரினர் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களை சுற்றி உள்ள சூழல் இனிமையாக இருக்கும். தாயுடன் கருத்தை வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று நீங்கள் மேற்கொள்ள பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப உறவில் மேன்மை ஏற்படும். புதிய தொழில், ஒப்பந்தங்கள் தொடர்பான விஷயத்தை இரு நாட்கள் தள்ளிப் போடுவது நல்லது.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். உங்கள் துணையிடம் நல்ல ஆதரவை பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்காக முயற்சியில் ஈடுபடுவீர்கள். சொத்து தொடர்பான விஷயத்தில் ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே செயல்படவும். வீட்டின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய அதிக செலவு செய்வீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். இன்று உங்களின் பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை. உங்களின் நிதிநிலை பலப்படும். வணிகத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பீர்கள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டின் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்க முயல்வீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிட முயல்வீர்கள். அரசு தொடர்பான திட்டங்கள் மூலம் பலனடைவீர்கள். வியாபாரத்தில் முழு லாபம் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் உங்களின் புகழ் அதிகரிக்கும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். இன்று உடன் பிறந்தவர்களின் திருமணம் குறித்த கவலைகள் தீரும். தொழில் நிமித்தமான பயணங்கள் அனுகூல பலனை தரும். அக்கம் பக்கத்தினருடன் தேவையற்ற தகராறு ஏற்படுத்த வைப்பது. உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள் . சட்ட விஷயங்களில் கவனம் தேவை.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டை பழுது பார்ப்பது, அலங்கரிப்பது தொடர்பான விஷயத்தில் பணம் கொஞ்சம் அதிகமாக செலவாகும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் பேசி மகிழ்வீர்கள். காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றல் பிறக்கும். அரசியலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் உல்லாசமாக நேரத்தை கழிப்பீர்கள். இன்று உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. சமூக வட்டாரம் அதிகரிக்கும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இன்று எதிரிகளை சமாளிக்க வேண்டிய நிலை இருக்கும். சொத்து வாங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமாக இருக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத் தொழில் தொடர்பான விஷயத்தில் தந்தையின் ஆலோசனை நற்பலனைத் தரும். உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். பணம் கொடுத்தல், வாங்குதல் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் உறவில் கவனம் தேவை.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் மூலம் நல்ல செய்தி தேடி வரும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் தீரும். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று உங்களின் முதலீடுகளும் மூலம் லாபத்தை பெறுவீர்கள். ஆன்மீகம் தொடர்பான விஷயத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். உங்களின் உடல் நலனில் எச்சரிக்கை தேவை.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பணிச் சுமை ஏற்படும். இன்று குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். வண்டி, வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். மாணவர்களுக்கு படிப்பு தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்கள் உதவும் முன் வருவார்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பழைய நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க வாய்ப்பு உண்டு. புதிய திட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு பண பலன்கள் அதிகரிக்கும். பிறரிடம் சிக்கி உள்ள உங்களின் பணம் மீட்கப்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உறவு பலப்படும். வியாபாரத்தில் நஷ்டத்தை தவிர்க்க சரியாகத் திட்டமிட்டு செயல்படவும். குடும்பத்தில் தேவையற்ற மனவருத்தம் ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டிய நாள்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...