இன்றைய ராசிபலன் : 5 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 5.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 19, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம், தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள பரணி, கிருத்திகை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் மும்முரமாகச் செயல்படுவதால் குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்க முடியாமல் போகும். இன்று ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் உடல் நிலையில் அலட்சியம் காட்ட வேண்டாம். இன்று உங்கள் வேலை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வயிறு, கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயத்தில் நல்ல தகவல் கிடைக்கும். மாலை நேரத்தில் சில விஷயங்களால் மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில குழப்பமான செய்திகள் கேட்க நேரிடும். முதலீடு சார்ந்த விஷயத்தில் குறைவான லாபம் கிடைக்கும். புதிய முதலீடு தவிர்ப்பது நல்லது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வீரம் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் ஓரளவு லாபம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பெரிய அளவில் நற்பலன்கள் கிடைக்கும். எதிர்காலத்தில் சிரமத்தைத் தரக்கூடிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். இன்று உங்கள் செயல் மற்றும் பேச்சில் கூடுதல் கவனம் தேவை. சுற்றுலா அல்லது வேலை தொடர்பான பயணம் செல்ல நேரிடும். இன்று உங்களுக்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். சட்ட விவகாரங்களில் கவனம் தேவை. அது தொடர்பான முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. எதிரிகள் உங்கள் வேலையை தடுக்க முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்களின் படிப்பு தொடர்பான மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும். வேலை வாய்ப்பு தொடர்பான முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும். உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. இன்று மாமியார் வீடு மூலம் நிதி ஆதாயம் பெறுவீர்கள். இன்று வண்டி, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் அடுத்தடுத்து நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். நீங்கள் செய்யக்கூடிய வேலையில் சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு பருவ கால நோய் தொடர்பான பாதிப்பு ஏற்படும். தலைவலி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புள்ளது உங்கள் நிதிநிலை மேம்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று முயற்சிகள் மற்றும் தைரியம் அதிகரிக்கக் கூடிய நாள். நிதிநிலை வலுப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. நீங்கள் மேற்கொள்ளக் கூடிய முயற்சியில் நல்ல பலனை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமணம் முயற்சியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பழைய பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்த தகராறு, கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வெளியூர், வெளிநாடு தொடர்பான வியாபாரத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரத்தில் எதிரிகள் மற்றும் பொறாமை கொண்ட மிக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். உங்கள் வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படவும். குடும்ப சூழ்நிலையில் எச்சரிக்கையாக இருக்கவும். பணியிடத்தில் பெண் நண்பர்களுடன் கவனமாக இருக்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய பயனுள்ள நாளாக இருக்கும். அடுத்தடுத்து நல்ல செய்திகள் தேடி வரும். மனமகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. இன்று எந்த சூழ்நிலையிலும் பேச்சில் கண்ணியத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுப பலன்கள் அதிகம் கிடைக்கக்கூடிய நாள். அரசியல் தொடர்பான நபர்களுக்கு புதிய வாய்ப்புகள், பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று நீண்ட நாட்களுக்கு நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசு தொடர்பான விருது, கௌரவம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பழைய சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். இன்று பிறரிடம் வாங்கி உள்ள கடனை திருப்பி செலுத்த வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்வீர்கள். பணியிடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு குறைவாக கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சில தடைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் வேலையை முடிப்பதில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
- 2024 raasi palan
- 2024 rasi palan
- daily rasi palan
- dhanushu raasi palan
- Featured
- indraya rasi palan
- kadaga raasi palan
- kanni raasi palan
- kumba raasi palan
- magara raasi palan
- meena raasi palan
- mesha raasi palan
- mithuna raasi palan
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- rishaba raasi palan
- shelvi rasi palan
- simma raasi palan
- sun tv rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil