tamilnaadi 153 scaled
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 30.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share

இன்றைய ராசி பலன் 30.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 30, 2024, சோபகிருது வருடம் பங்குனி 17, சனிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷ ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். சில பிரச்சினைகள் உங்களை வருத்தமடையச் செய்யும். புதிய வேலைகளையும், தொழிலையும் தொடங்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்களின் கடின உழைப்புக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பழைய தவறுகளை நினைத்து கவலைப்பட வேண்டாம். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இது உங்களின் வருமானம் அதிகரிப்பதோடு, நிறைய செலவுகள் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் காதல் நிறைந்திருக்கும். பயணத்தின் போது கூடுதல் கவனம் தேவை.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அனுகூல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தால் லாபம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கிய முடிவுகளை, குடும்ப மூத்தவர்களின் ஆலோசனையை பெற்ற பின்னர் எடுக்கவும். சமூகத்தில் முக்கியமான நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். உங்களின் உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலை சிறப்பான வெற்றியை தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மனவருத்தத்தை தரும். நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்களுக்கு, திருமண வரன் அமையும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மனைவியின் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. உங்களின் கௌரவம் அதிகரிப்பது. கடின உழைப்பு நிறைந்த நாளாக இருக்கும். பண விஷயத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சூழல் இருக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். உங்களின் வருமானம் உயர, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து வருமானம் கிடைக்கும். எதிரிகள் விஷயத்தில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்த பின்னர் எடுக்கவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் இதயம் தொடக்கூடிய அன்பான சில நிகழ்வுகள் நடக்கும். உங்கள் சகோதரி, சகோதரர்களுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் வகையில் சாதகமான நாளாக இருக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடக் கூடியவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சிலரின் உதவிகளும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். உங்கள் துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் புகழ் அதிகரிக்கும். ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு உண்டாகும். முதலீடு சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று சில விஷயங்களை பிடிவாதம் பிடிப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு ஏற்றவாறு சில நன்மைகளும், வசதிகளிலும் ஏற்படும். சிலருக்கு இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். காதல் விஷயத்தில் கவனமுடன் செயல்படவும். வேலை தொடர்பாக பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும். பெரிய வெற்றியை எதிர்பார்க்க முடியாது. உங்களின் செலவுகள் அதிகரிக்கும். வேலை தேடக்கூடியவர்களுக்கு, நல்ல தகவல் கிடைக்கும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் திடீர் செலவு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வணிகம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. இன்று உங்கள் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சு, செயலில் கவனம் தேவை. பணியிடத்தில் நீங்கள் சவால்களை சந்திக்க நேரிடும்.

Share
தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...