இன்றைய ராசிபலன் : 3 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 3.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 17 ஞாயிற்று கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷ ராசியில் உள்ள சேர்ந்த ரேவதி, அனுஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலையை விட்டு மற்றவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வேலையை வேகமாக முடிக்க பணியிடத்தில் சில மாற்றங்களை செய்ய சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உடல்நிலை பிரச்சனைகள் தொடர்பாக அலைய வேண்டியது இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மற்ற நாட்களை விட இன்று சிறப்பானதாக இருக்கும். உங்கள் துணையுடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் மீது நிலை முன்னேற்றமும் தரும். வேலையில் உறுதியாக செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான கவனம் தேவை.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் பெற்றோர் மற்றும் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று வண்டி, வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று கடன் வாங்குவதைத் தவிர்ப்பதோடு, ஆடம்பர விஷயத்தில் விலகி இருக்கவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தின் மூலம் உங்களுக்கு சாதக பலனை தரக்கூடிய நாள். வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் மூலமாக செய்திகள் வந்து சேரும். திருமண தடைகள் நீங்கும். திருமண நிச்சயம் தொடர்பாக குடும்பத்தில் மதிப்பு உண்டாகும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். இன்று விவேகத்துடன் எடுக்கக்கூடிய முடிவில் வெற்றி அடைவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு எதிர்பாராத வெற்றியை பெறலாம். உங்களின் முன்னேற்றம் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். இன்று உங்கள் உணவு பழக்கத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கடின உழைப்பிற்கு பின்னரை படிப்பில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியும். தொழில் சம்பந்தமான நல்ல செய்திகள் கேட்பீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று ஏதேனும் ஒரு யோசனை மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். உங்களின் திட்டங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்கள் சிறப்பான பலனை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இன்று அன்பானவர்களுடன் எதிர்கால உத்திகளை பற்றி விவாதிபர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கல்வித் துறையில் இருக்கக்கூடிய போட்டியில் சிறப்பான சாதனையைப் படைப்பீர்கள். இன்று சளி, காய்ச்சல் என பருவ கால நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது .வியாபாரத்தில் புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசுகள் வழங்க நினைப்பீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றி அதிகரிக்க கூடிய நாள். சமூகத்தில் உங்களின் புகழ் உயரும். பரஸ்பர கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். இன்று உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. நாளை நேரத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக கழிப்பீர்கள். வெளிநாடு தொடர்பான வியாபாரத்தில் சில சிறப்பான செய்திகளை கேட்பீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான வீட்டுக்கு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் பணம் அதிகமாக செலவாகும். இன்று பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்த்த அரசு வேலைகள் குறித்த நேரத்தில் முடியாததால் வருத்தம் அடைவீர்கள். உத்தியோகத்தின் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபார ரீதியாக உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் தொழில் தொடர்பாக நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் முன்னேற்றத்தை காண்பீர்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் அல்லது மங்கள நிகழ்வுகள் நடக்கும். வணிகத் திட்டங்களில் முன்னேற்றத்தை கண்பீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கக்கூடிய நாள். அரசு வேலை தொடர்பாக சில நல்ல தகவல்கள் கேட்டு மகிழ்ச்சியடைவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நல்ல செய்திகள் கிடைக்கும்.பெற்றோரின் ஆரோக்கியத்தில் தொந்தரவு ஏற்படும். கண் தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். மூதாதையர் சொத்து தொடர்பான விஷயத்தில் சாதக தீர்ப்பு கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். இல்லற வாழ்க்கையில் புதிய உணர்வுகளை அனுப்பி வைத்தீர்கள். வாழ்க்கைத் துணை மீது அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடுவார்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும், அவர்கள் மூலம் அனுகூல பலன்கள் கிடைக்கும். வணிகத்தில் சாதகமான சூழல் இருக்கும். சொந்த வியாபாரத்தில் பெற்றோரின் ஆலோசனை முன்னேற்றத்தை தரும்.
- 2023 rasi palan
- 2024 raasi palan
- 2024 rasi palan
- daily palan
- daily rasi palan
- Featured
- indraya rasi palan
- kanni raasi palan
- kumba raasi palan
- mesha raasi palan
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan tamil
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- simma raasi palan
- sun tv rasi palan
- today palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- Today Rasi Palan Tamil