ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 16.01.2024 – Today Rasi Palan

Share
tamilni 241 scaled
Share

இன்றைய ராசிபலன் ஜனவரி 16, 2024, சோபகிருது வருடம் தை 2, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கும்பம், மீன ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம், சிம்ம ராசியில் உள்ள ஆயில்யம், மகம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

​மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல அனுகூலம் கிடைக்கும். உங்கள் நண்பர்கள் மூலம் சில முக்கிய தகவல் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். மதியத்திற்குப் பிறகு திடீரென்று சில பிரச்சனைகள் தோன்றலாம். வேலையில் உள்ள அழுத்தம் காரணமாக நீங்கள் எங்கயோ வசமாக சிக்கிக் கொண்டதை போல் உணர்வீர்கள்.மனைவி இடையே ஒற்றுமை நன்றாக இருக்கும்.
உங்கள் வேலையை சிலர் கெடுக்க முயற்சிப்பார்கள். இந்த விஷயங்கள் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உங்களுக்கு பிடித்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உதவுவதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த முயற்சித்தால், அது பயனுள்ளதாக இருக்கும்.
நாளின் இரண்டாம் பகுதியில் சில பிரச்சனை ஏற்படுவதால், உங்கள் கவலை அதிகரிக்கலாம். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம், சில பிரச்சனைகள் ஏற்படும். தொழில் மற்றும் துறைகளில் சிறப்பாக செயல்பட முயற்சிக்கவும். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம்:

மிதுனம் ராசிக்காரர்கள் அதிக பொறுப்புகள் இருக்கும். நாள் முழுவதும் அலைச்சல் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களின் உடல்நலக்குறைவு காரணமாக, உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். உங்கள் பணியில் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெற்ற பிறகு நிதானமாகவும் நிம்மதியாகவும் உணர முடியும். பணப் பரிவர்த்தனை செய்யும் போதும் மிகவும் கவனமாக இருக்கவும்.
ஏனென்றால், தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். அதிகப்படியான வேலை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். பணியிடத்தின் உள் அமைப்பில் முன்னேற்றம் ஏற்படலாம். வீட்டின் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் வரலாம்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். வீட்டில் உள்ள முதியவரின் உடல்நிலை பிரச்சனையால், மனம் அமைதி இல்லாமல் இருக்கும். உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் உரையாடுவது உங்களுக்கு மனா அமைதியை கொடுக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் சரியான நேரத்தை செலவிடுவது உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். முதலீடு தொடர்பான எந்த வேலையையும் செய்வதற்கு முன் கவனத்துடன் செயல்படவும். முடிந்தால், அந்த வேலையை ஒத்திவைக்கவும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரும்பாலான நேரத்தை வீட்டு வேலைகளிலும், குடும்பத்தாருடன் செலவிடுவார்கள். இதனால் நீங்கள் மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள். பொருளாதாரம் இன்று நன்றாக இருக்கும்.
நாளின் இரண்டாம் பகுதியில் சில கவலைகள் உங்களை ஆக்கிரமிக்கும். உங்கள் எதிரிகள் உங்களைப் பற்றி தவறான விஷயங்களைப் பரப்பலாம். ஆனால் இது உங்கள் நற்பெயருக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. குடும்ப விஷயத்தில் வெளியாட்கள் யாரும் தலையிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன் கிடைக்கும். அதாவது, சில சமயங்களில் லாபமும், சில சமயங்களில் நஷ்டமும் ஏற்படும். உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அவசரப்பட்டோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வீண் செலவுகள் ஏற்படும்.
வியாபாரம் ரீதியாக தொழில் சற்று மந்தமாக இருக்கும். ஆனால், தேவைக்கேற்ப லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நன்றாக இருக்கும்.

துலாம்:

இன்று நிம்மதியாக உணர்வார்கள். அத்துடன் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் வேலையில் வெற்றியடைவீர்கள். உறவினருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உங்களின் பணிநடை மேம்படும். வெளியில் புதிய திட்டங்களை வகுப்பீர்கள்.

காதல் விவகாரத்தில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படலாம். முடிவையும் நன்றாக யோசித்த பின்னர் எடுக்கவும். வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு சரியான பலன் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்த வேலையில் வெற்றி காணிப்பீர்கள். குழந்தையின் எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். சில பொதுவான விஷயங்களில் நெருங்கிய உறவினருடன் தகராறு ஏற்படலாம். அது உங்களுக்குள் இருக்கும் உறவைக் கெடுக்கும்.
நீங்கள் வீட்டில் ஒரு புதிய பொருள் அல்லது ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க திட்டமிட்டிருந்தால், ஷாப்பிங் செய்யும் போது பட்ஜெட்டை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கடந்த சில நாட்களாக நீங்கள் முயற்சி செய்யும் விஷயத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்களை போலவே எண்ணம் கொண்ட இன்னொருவரை நீங்கள் சந்திப்பீர்கள். இது உங்கள் மனதிற்கு ஆறுதல் கொடுக்கும். வேலைக்கும் குடும்பத்துக்கும் இடையே சரியான சமநிலையை கடைபிடிப்பீர்கள். பொருளாதார ரீதியாக சில ஏற்ற தாழ்வுகளை சந்திப்பீர்கள்.
பயணம் செய்வதை தவிர்க்கவும். பணியிடத்தில் நீங்கள் செய்யும் மாற்றம் பயனுள்ளதாக இருக்கும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகவும், சமயப் பணிகளில் ஈடுபாட்டுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். பண விஷயத்தில், மற்றவர்களை நம்புவதை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினரின் திருமணம் குறித்த பிரச்சனைகள் நீங்கும். மன கவலைகள் நீங்கி உங்கள் வேலையில் இருந்த தடை நீங்கலாம்.
வீட்டு பராமரிப்பு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பொருட்களை வாங்குவதில் செலவு அதிகரிக்கும். பணியிடத்தில் சில கடினமான மற்றும் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள், இன்றைய நாள் அனுகூலமான நாளாகும். இன்று உங்களுக்கு பல வழிகளில் லாபம் கிடைக்கும். சில புதிய வேலைகளை திட்டமிடலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் அதிகம் நம்பும் நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் போது கவனமாக இருங்கள், அவர்கள் உங்களுக்கு துரோகம் செய்யலாம்.
தொழில் நடவடிக்கைகள் முன்பு போல் தொடரும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் இணக்கமாக இருந்தால், நாள் நன்றாக இருக்கும். பணிச்சுமை இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள், இன்று பல வகையான சிக்கலை சந்திப்பார்கள். அனுபவம் வாய்ந்த ஒருவரின் வழிகாட்டுதலால் இன்று வரும் சிக்கல்களை தைரியமாக சமாளிப்பீர்கள். தடைபட்ட திட்டங்ககளை துவங்க இன்று நல்ல நாள். மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

நெருங்கிய உறவினரின் உடல் நலம் குறித்து மனதில் சில தீய எண்ணங்கள் தோன்றும்.
ஆன்மிகம் மற்றும் சமயப் பணிகளில் சிறிது நேரம் செலவிட்டால் மன அமைதி கிடைக்கும். தொழில் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். உங்கள் ஓய்வுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...