tamilnaadi 4 scaled
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 1 நவம்பர் 2024 – Daily Horoscope

Share

இன்றைய ராசிபலன் : 1 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 1.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 15 வெள்ளிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் புரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகத்தில் உங்களின் ஆலோசனை வரவேற்கப்படும். அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசாங்க வேலையில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் மூலம் சில நல்ல தகவல்கள் கிடைக்கும். இன்று கடன் கொடுக்கும் விஷயத்தில் கவனம் தேவை.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். இன்று ஒரு முக்கியமான வேலையை செய்து மன நிறைவடைவீர்கள். ஆன்மீக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும். அரசு வேலை தொடர்பான விஷயத்தில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். தந்தையின் உடல்நிலை சற்று குறைவாக இருக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நிலையில் அலட்சியமாக இருக்க வேண்டாம். நிதி கண்ணோட்டத்தில் சில தடுமாற்றம் ஏற்படும். சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்காலத்தில் அதன் மகத்தான பலனைப் பெறுவீர்கள். குடும்ப உறவினர்களின் உதவியால் பிள்ளைகளின் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சோம்பேறித்தனத்தை கைவிடவும். இதனால் சில வேலைகளை தள்ளி போடக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக பயணம் செய்ய திட்டமிடுவீர்கள். பயணங்களில் போது உடைமைகள் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் ஆசிரியர்களின் நல்ல ஆதரவை பெறுவீர்கள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். முக்கிய விஷயத்தில் குடும்ப மூத்த உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆரோக்கியம் தொடர்பாக கொஞ்சம் பணம் செலவிட நேரிடும். இன்று உங்கள் வருமானத்திற்கும், சிலருக்கும் இடையே சமநிலையைப் பராமரிப்பது நல்லது. உடல் நலப் பிரச்சனைகளில் கூடுதல் கவனம் தேவை.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பழைய திட்டங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். இன்று பணபலம் அதிகரிக்கும். நிதிநிலை வலுவாக இருக்கும். எதிர்காலம் குறித்த கவலைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களுடன் விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இன்று சட்டம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் விஷயத்தில் கவனமாக படிக்கவும். வியாபாரிகளுக்கு தந்தையின் நல்ல ஆலோசனையும், ஆதரவும் கிடைக்கும். திருமணமானவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சில நல்ல செய்திகள் தேடி வரும். ஏமாற்றம் நீங்கும். உங்களின் விடாமுயற்சி மூலம் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களின் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நண்பர்கள் உங்களுக்கு உதவும் முன்வருவார்கள். குடும்பத் தேவைக்காக அலைச்சல் ஏற்படும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சிக்கல்கள் தீரும். புத்திசாலித்தனம் மற்றும் ஞானத்தால் கடினமான சூழ்நிலை கடக்க முடியும். இன்று உங்களின் அவசரத்தை எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள். அதனால் நிதானமாக எதையும் யோசித்து செயல்படவும். வேலை தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும் நாள். எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மைகள் தரும் முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். பெற்றோருடன் ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள். இன்று முக்கிய வேலைகளை முடிப்பதில் கூடுதல் கவனம். வீட்டில் பதற்றமான சூழல் இருக்கும். மாணவர்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றியை பெறுபவர்கள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகம் மற்றும் சமூக நிகழ்ச்சி தொடர்பாக கொஞ்சம் பணம் செலவிடுவீர்கள். இன்று ஆர்வத்துடன் எந்த வேலையிலும் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் சில மன அழுத்தமான சூழல் இருக்கும். எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். காதலில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

Share
தொடர்புடையது
ILLAYARAJA14
ஜோதிடம்சினிமா

எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு...

horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...