இன்றைய ராசி பலன் 03.08.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 03 2023, சோபகிருது வருடம் ஆவணி 17 ஞாயிற்றுக்கிழமை. சுபமுகூர்த்த தினமான இன்று, சந்திரன் மீனம் ராசியில் உள்ள ரேவதியில் சஞ்சரிக்கிறார். சதுர்த்தி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் குதூகலமான நாளாக இருக்கும். பன்னிரண்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். பணிச்சுமையைச் சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் இன்று மனநிம்மதி தரக்கூடிய நாளாக இருக்கும்.
பழைய நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத் தொழிலில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.
மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மனதிற்கு திருப்தியான நாளாக அமையும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும், நிதி நிலைமையிலும் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும்.
வியாபாரிகளுக்கு மிகவும் சிறப்பான நாள். இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். மாலை எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் உங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.கடன்காரர்களின் தொல்லை குறையும். இன்று காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையும். பத்தில் சந்திரன் மறைந்து இருந்தாலும் இன்று தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிறு சிறு வியாபாரம் செய்பவர்களுக்கும் இன்று நல்ல சாதகமான நாளாக அமையும்.
மகா சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சனியின் அமைப்பால் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து சென்றாலும், இனிமையான பலன்கள் கிடைக்கும். குடும்ப ஒற்றுமைகள் ஓங்கும். இன்று உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.எந்த வேலை செய்ய நினைத்தாலும் அது கண்டிப்பாக நிறைவேறும்.
சதுர்த்தி தினமான இன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்யவும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சற்று மன வருத்தங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். இன்று உங்கள் ராசியில் உள்ள பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமமாக அமைகிறது. நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு வேலை, முடிவுகளிலும் கூடுதல் கவனம் தேவை. கண் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால், அதில் மேலும் பிரச்னை அதிகரிக்கும். இன்று நீங்கள் மன உளைச்சல் மற்றும் பதட்டம் காரணமாக அலையலாம்.
விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யவும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடிய நபர்கள் கூடுதல் கவனத்துடன் செல்லவும். இன்று உங்களுக்கு தேவையில்லாத செலவுகள், விரயங்களும் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். இன்று மனதிற்கு திருப்தியான நாளாக இருக்கும். இன்று காலை வேளையில் நீங்கள் எதிர்பார்த்த சில முக்கிய விஷயங்கள் நடக்கும். புதிய வேலை முயற்சிகளில் வெற்றி உண்டு.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு கைக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மற்றும் உடல்நல குறைபாடுகள் நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.
விநாயகர் வழிபாடு செய்ய எடுத்துக் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் திருப்திகரமான நாளாக அமையும். மனதில் இருக்கும் பாரங்கள் தீரும். திருமணம் முயற்சிகள் மேற்கொண்டுள்ள விருச்சிக ராசி நேயர்களுக்கு திருமண யோகம் கைகூடும்.காதலர்களுக்கு உன்னதமான நாளாக அமைகிறது..
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல் அதிகமாக இருக்கும். பேசாமல் இருந்த, உங்களை விட்டு பிரிந்து சென்ற நண்பர்கள், உறவினர்கள் இன்று உங்களோடு வந்து சேர வாய்ப்புள்ளது. சொத்து தகராறுகள் தீர்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
இன்று விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலை முயற்சிகளில் வெற்றி உண்டு.இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதும், முக்கிய நபர்களை சந்திப்பதிலும் சங்கடகர சதுர்த்தி தினமான இன்று வெற்றி உண்டாகும்.
இன்றைய நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்ய மிகச் சிறப்பான நாளாக அமையும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்ப சண்டைகள், குழந்தைகளை பிரிந்து இருக்கக்கூடிய சூழ்நிலைகள் நீங்கி நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும். சந்திரன் அரசியல் சந்திப்பதால் வெற்றி தரும். இன்று மன ஆறுதல் கிடைக்கக்கூடிய நாளாக அமைகிறது. இன்று நீங்கள் முடிவுகள் எடுப்பதில் சற்று தடுமாற்றங்கள் ஏற்படலாம். ஆகவே முக்கிய முடிவுகளை மாலைக்கு பிறகு எடுப்பது நல்லது.
- 2024 Rasi Palan in Tamil
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- kumbam rasi palan 2024 in tamil
- meenam rasi palan 2024 in tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- sithariyal maruthuvam rasi palan
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan