இன்றைய ராசி பலன் 25.12.2023 – Today Rasi Palan

tamilni 426

இன்றைய ராசி பலன் 25.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் டிசம்பர் 25, 2023, சோபகிருது வருடம் மார்கழி 9, திங்கட் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானத்தை தரக்கூடிய நல்ல நாளாக அமையும். புது தொழில் முயற்சிகள் வெற்றி கொடுக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொள்ளும் சிறந்த நாளாகும்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. சேவை துறை மற்றும் உணவுத்துறை சுற்றுலாத்துறை போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல பெயரை ஈட்டக்கூடிய நாள் இன்றைய நாள் ஆகும்.

ரிஷபம்:

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். குடும்பத்தில் கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும். திடீர் தனவரவு ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். அது சம்பந்தப்பட்ட சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும்.

வெற்றி கிடைக்கும் நாள் ஆகும் செய்யும். தொழிலில் மேன்மை கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக உணவுத்துறை சுற்றுலாத்துறை பிரின்டிங் விஷுவல் மீடியா கலைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றி தரும் நாளாக இன்றைய நாள் அமையும்.

​மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இன்று மிகச் சிறந்த நாளாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். தொழிலை வெற்றிகரமாக முன்னேற்றி செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.
வீட்டிற்கு தேவையான நல்ல பொருட்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. பங்குவர்த்தகத்தில் வங்கித் துறை சேவைத் துறை தங்கம் மற்றும் இரும்பு காப்பர் போன்றவற்றின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உண்டு.

கடகம்
கடக ராசிக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டு. மனைவி உறவு மேம்படும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் வயதானவர்களுக்கு உடல் நலம் சீராக இருந்துவரும். உங்கள் பேச்சிற்கு மரியாதையும் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். படிப்பில் கூடுதல் கவனம் தேவை. கருடாழ்வார் வழிபாடு பிரச்சனைகளை தவிர்த்து வெற்றியை நோக்கி உங்களை முன்னிறுத்தும்.

சிம்மம் இன்றைய ராசி பலன் ​Leo
நேயர்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். திட்டமிட்டபடி இன்று வேலைகள் அனைத்தும் முடிவடையும். நிதி தொடர்பான முக்கிய திட்டங்களின் சாதகமான முடிவுகளால் மனதில் மகிழ்ச்சி இருக்கும். இளைஞர்களுக்கு எந்த வேலை வாய்ப்பு கிடைத்தாலும் அது பயனுள்ளதாக இருக்கும்.
குடும்ப விவகாரம் தொடர்பாக சகோதர-சகோதரி அல்லது நெருங்கிய உறவினருடன் தகராறு ஏற்படலாம். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையுடன் முடிவெடுக்கவும்.

கன்னி இன்றைய ராசி பலன் Virgo

​கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் கிடைக்கும். நாளாக இன்றைய நாள் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வருவதற்கான நாள் ஆகும். வாகன வகை சொத்து சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயம் உண்டு.
உணவு தொழில் சுற்றுலா துறை சேவைத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும். கணக்குத்துறை சீருடை பணியாளர்கள் மருத்துவத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும்.

துலாம் இன்றைய ராசி பலன் Libra
நண்பர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நீங்கள் குழப்பம் மற்றும் அமைதியின்மையிலிருந்து விடுபடலாம். ஆன்மிகம் மற்றும் சமயப் பணிகளில் சிறிது நேரம் செலவிடுவது மன அமைதியைத் தரும். சில முக்கியமான தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது என்பதால் எந்த தொலைபேசி அழைப்பையும் புறக்கணிக்காதீர்கள்.

உங்கள் தனிப்பட்ட திட்டத்தை தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள் கவனக்குறைவு முக்கியமான ஒன்றை இழக்க வழிவகுக்கும்.

விருச்சிகம் இன்றைய ராசி பலன் Scorpio
இன்று கொஞ்சம் பிஸியாக இருப்பார்கள், வேலை அதிகரிக்கும். சமயப் பணிகளில் சிறப்பான பங்களிப்பு இருக்கலாம். மற்றவருக்கு உதவுவது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உறவு இனிமையாக இருக்கும்.

வாகனம் அல்லது சொத்து வாங்கும் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சில பெரிய செலவுகளும் வரலாம். வியாபாரத்தில் நிலைமை முன்பு போலவே இருக்கும், வேலை அதிகமாக இருக்கும். நீங்கள் குடும்பத்தில் சரியான கவனம் செலுத்த முடியாத நிலை இருக்கும்.

தனுசு இன்றைய ராசி பலன் Sagittarius
நண்பர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். ஒரு சில பிரச்சனைகள் வந்தாலும் பெரிதாக மனதை பாதித்தது என்று இல்லை. காரிய தடை நீங்கும்.

மகரம் இன்றைய ராசி பலன் Capricorn
நீங்கள் நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த வேலையில் வெற்றி கிடைக்கும். குடும்பத்திற்காக நேரம் செலவிட வேண்டியது இருக்கும். கோபத்திலும் தூண்டுதலிலும் முடிவெடுக்க வேண்டாம். உங்கள் மனதிற்கு பிடித்த வேலைகளைச் செய்வது மகிழ்ச்சியைத் தரும்.

உங்கள் கருத்தை அமைதியாகவும் பொறுமையாகவும் வைக்க முயற்சி செய்யுங்கள். கற்பனையில் வாழ்ந்து யதார்த்தத்தை எதிர்கொள்ளாதீர்கள். வணிக நடவடிக்கைகளிலும் நீங்கள் மிகவும் பிஸியாக இருக்கப் போகிறீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும்.

கும்பம் இன்றைய ராசி பலன் Aquarius

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மனமகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். ஒரு சிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் இவற்றால் நன்மையே விளையும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும். கல்விக்காக வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள்.

​மீனம் இன்றைய ராசி பலன் Pisces

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. வாகன வகையில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு அடித்தளம் அமைக்கும் நல்ல நாளாக இன்றைய நாள் அமையும்.

வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

 

Exit mobile version