இன்றைய ராசி பலன் 19.10.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் அக்டோபர் 18, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 2 வியாழக் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனதில் தெளிவு ஏற்படும். சந்திரனின் சஞ்சாரம் விருச்சிக ராசியில் இருப்பதால் உங்கள் செயல்கள், வேலையில் குழப்பமான மன நிலை இருக்கும். குடும்ப விஷயங்களில் மன சந்தோஷமும், இணக்கமான சூழலும் இருக்கும். இன்று எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. தன லாபங்கள் கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.
குபேரனை வழிபடவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. குறிப்பாக கிருத்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒரு காரியத்திலும் கவனமாக இருப்பது நல்லது. குழப்பங்கள் இருந்த போதிலும் மனதில் அமைதி இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப ஒற்றுமை ஏற்படும். மனதில் குறைகள் நண்பர்களால் தீரும். மாரியம்மனை வழிபடவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் தன லாபங்கள் உண்டு. வரவை விட செலவுகள் அதிகமாக இருந்தாலும் இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நாள் முழுவதும் சந்தோஷங்கள் ஏற்படும். குரு வாரத்தில் நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
தீபாவளிக்கு முன் வரும் உருவாகும் அதிர்ஷ்ட கிரக சேர்க்கை – இந்த ராசிகளுக்கு மகாலட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கடக ராசி அன்பர்களுக்கு, இன்று ராசி நாதன் சந்திரன் நீசம் பெற்றிருக்கிறார். இதனால் மனக்கிலேசம், மன குறைபாடு இருந்தாலும், மற்ற கிரகங்களின் அமைப்பானது பெரியளவில் பிரச்னை தரக்கூடியதாக இல்லை. இன்று சிவ வழிபாடு செய்வது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு தரும் நாள். காதலர்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். சண்டை, சச்சரவுகள் இல்லாத நாளாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்றூ முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய கிரக தோஷங்கள் விலகும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். பங்குசந்தை முதலீடுகள் நன்மையை தரும். இன்று தனலாபங்கள் வர மாலை நேரத்தில் லட்சுமி குபேரனை வழிபடலாம். லாபங்கள் கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு தரக்கூடிய நாள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனப்போராட்டங்கள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. பல நாட்களாக உங்களுக்கு வர வேண்டிய பண பாக்கிகள் வசூலாக வாய்ப்புள்ளது. விநாயகர் வழிபாடு செய்ய விக்கினங்கள் தீரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியில் சந்திரனின் சஞ்சாரம் செய்வதால் மனக்குறைகள் தீரும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இன்று சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் மன திருப்தியை தரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பசு மாடுகளுக்கு உணவளிக்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு தரக்கூடியதாக இருக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். மூலம், பூராடம் நட்சத்திரத்தினருக்கு தொலை தூர விஷயங்கள் நன்மையைத் தரும். வேலை விஷயத்தில் நன்மைகள் உண்டாகும். இன்று குலதெய்வ பிரார்த்தனை செய்வது நல்லது.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு பங்கு சந்தை முதலீடுகள் நன்மை தரும். நண்பர்களின் உதவி, ஆதரவு கிடைக்கும். இன்று காலை வேளையில் பெருமாள் வழிபாடு செய்யவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகள் கிடைக்கும். இன்று கும்ப ராசியினருக்கு மாலை நேரத்தில் நல்ல செய்திகள் தேடி வரும். நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மன அமைதியும், மன நிறைவும் கிடைக்கக்கூடிய நாள். இன்று சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்த மன வருத்தம், கருத்து வேறுபாடுகள் விலகி குடும்ப ஒற்றுமை மேம்படும். பண விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். இன்று அன்னதானம் செய்வது நல்லது. ராகவேந்திரர் சுவாமி வழிபாடு செய்யவும்.
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- daily rasi palan zee tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- indraya rasi palan zee tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- rasi palan today zee tamil
- shelvi rasi palan today
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- zee tamil rasi palan today