இன்றைய ராசி பலன் 14.10.2023 – Today Rasi Palan – இன்று சூரிய கிரகணம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 27 சனிக்கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம்
இன்று உங்கள் நண்பர்களுடன் வேலை அல்லது சுற்றுலாவுக்கு நீண்ட தூர பயணம் செல்ல திட்டமிடலாம். சமூக பணியாளர்கள் மரியாதையைப் பெறுவார்கள். உங்களுக்கு ஏதேனும் அரசாங்கம் தொடர்பான வேலைகள் கிடப்பில் இருந்தால் அது முடியும். திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். இன்று நீங்கள் எந்தவொரு ஒழுக்கக்கேடான செயலிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.
ரிஷபம்
தொழிலதிபர்கள் இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், உங்கள் பணியிடத்தில் உள்ள திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும். கடன் திருப்பி செலுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணமாக நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். இன்று உங்கள் மனைவியுடன் மாலை நேரத்தை செலவிடுவீர்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்குள் ஒரு புதிய ஆற்றலைப் புகுத்தக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும் நாள். இன்று வியாபாரத்தில் சிறிய லாபத்திற்கான வாய்ப்புகளை நாள் முழுவதும் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் அதிகாரிகளுடன் இருக்கும் கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும். இன்று நீங்கள் உங்கள் வரம்புக்குட்பட்ட வட்டத்தை விட்டு வெளியே வந்து திறமையை வெளிப்படுத்தி பயனடைவீர்கள். பிள்ளையின் முன்னேற்றத்தைக் கண்டு உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்
இன்று நீங்கள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மற்றவர்களின் விமர்சனத்தை தவிர்த்து உங்கள் திறமையை வெளிப்படுத்தவும். பிறரின் மோசமான பேச்சு உங்களை சற்று கவலையடையச் செய்யும். சமூகப் பணிகளில் தொடர்புடையவர்கள் இன்று பொதுமக்களின் ஆதரவைப் பெறுவார்கள். நண்பர்கள், அன்பானவர்களை சந்திப்பதன் மூலம் பயனடைவார்கள். கூட்டுத் தொழில், வியாபாரத்தில் சில விவாதங்கள் ஏற்படலாம். தந்தையின் உதவியால் எந்த வேலை செய்தாலும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் உங்கள் தொழிலில் சாதனைகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் எதிரிகள் வேலைகளில் தடைகளை உருவாக்கலாம் கவனம். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு சாதகமான காலம். உங்களின் முயற்சி நல்ல வெற்றி தரும். இன்று நீங்கள் மற்றவர்களின் வார்த்தைகளைப் பின்பற்றி முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வித்துறையில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்,.
கன்னி
பாதகமான சூழ்நிலைகள் வந்தாலும் பதற்றமடையாமல், தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய நாள். மாணவர்களின் திறமைகள் வளரும். அரசியலில் மேலிடம், தொண்டர்களின் உதவியைப் பெறலாம். இன்று மாலை உங்களுக்கு திடீர் பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
வேலைகளில் கடின முயற்சிகளுக்குப் பிறகுதான் பலன்களைப் பெற முடியும். உங்கள் எண்ணங்கள், திட்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
துலாம்
இன்று பணியிடத்தில் உங்களின் ஆலோசனைகள் அலுவலகத்தில் வரவேற்கப்படும். நண்பர்களுடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். இன்று, உங்கள் மனைவியின் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். உங்கள் பேச்சில் இனிமையை பராமரிக்க வேண்டும். காதல் வாழ்க்கை வாழ்பவர்களின் வாழ்வில் இனிமை இருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்கள் வாழ்க்கைத் தேவைக்காக, விசேஷங்களுக்கான செயல்களில் அதிகம் பணம் செலவிடுவீர்கள். சுப காரியங்களில் வெற்றியடைவீர்கள். இன்று நீங்கள் ஒரு ஒப்பந்தத்தை முடிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். உங்கள் பிஸியான கால அட்டவணையில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக உங்களால் நேரத்தைச் செலவிட முடியாமல் போகலாம். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் ஆதாயமடைவீர்கள். யாருடனும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
தனுசு
இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும், உங்கள் அன்றாட வேலைகளில் அலட்சியமாக இருக்க வேண்டாம், அது இழுபறியான நிலைக்கு கொண்டு செல்லும். புதிய நபர்களுடன் தொடர்பு வணிகத்தில் உதவியாக இருப்பார்கள். விருந்தினர் வருகை இருக்கும். குடும்பத்தில் திருமண பிரச்னை ஏற்பட்டால் தீரும்.
மகரம்
பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளுடன் நெருங்கிய நட்பைப் பெறுவீர்கள். உங்களுக்கு விருப்பமான வேலை ஒதுக்கப்படலாம். அதனால் மகிழ்ச்சியடைவீர்கள். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும். காதல் வாழ்க்கையில் தங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். குடும்பத் தொழிலில் இன்று தந்தையின் ஆலோசனையைப் பெறுவீர்கள்.
கும்பம்
இன்று நீங்கள் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். உலக சுகபோகங்களுக்காகக் கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள். இன்று சமூக நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வீடு, மனை வாங்க விரும்பினால் அதற்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலை ஏற்படும். நீங்கள் சில முதலீடுகளையும் செய்வீர்கள்.
மீனம்
இன்று பிள்ளைகள் சம்பந்தமாக பிரச்சனைகள் தந்தை, மூத்தவர்களின் உதவியால் தீர்க்க முடியும். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். உடல்நிலையில் சில சங்கடங்கள் ஏற்படலாம். உங்கள் வீடு அல்லது வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அந்த பணத்தை இன்று திரும்பப் பெறலாம்.
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan today
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan
- vendhar tv rasi palan
- zee tamil rasi palan today