இன்றைய ராசி பலன் 14.04.2024 – இன்று தமிழ் வருட பிறப்பு
இன்றைய ராசிபலன் ஏப்ரல் 14, 2024, சோபகிருது வருடம் சித்திரை 1, ஞாயிற்று கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம், மிதுன ராசியில் உள்ள சேர்ந்த சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் தடைகள் நீங்கும். உங்களின் எண்ணங்களை வெளிநபர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். இல்லை எனில் தேவையற்ற பிரச்சனையை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் கடின உழைப்பிற்கு பின்னரே இலக்கை அடைய முடியும். உங்களின் குடும்ப வாழ்க்கையில் அமைதியையும் நிதானத்தையும் பேணவும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்களில் மிகவும் கவனத்துடன் செயல்படவும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல்நிலை மோசமடைய கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்களின் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். திருமணமானவர்களுக்கு உங்கள் துணையின் முழு ஆதரவும் அன்பும் கிடைக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதும். லாபமும் சிறப்பாக கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சவால்களை சந்திக்க நேரிடும். இன்று உங்களின் வருமானம் அதிகரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வேலையில் தடைகளை ஏற்படும் என்பதால் மனக்கவலை ஏற்பட வாய்ப்புள்ளது. சமூக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். இன்று உங்களின் பிரச்சனைகளை சமாளிக்க நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உழைக்கும் வர்க்கத்தினருக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையும். நண்பர்களுடன் சுற்றுலா அல்லது வெளியிடங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள். வேலை தொடர்பான பயணங்கள் நற்பலனை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் வேலைகளில் சகோதரர்களின் உதவி ஆதரவு சிறப்பாக கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப விஷயங்கள் மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். இன்று உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். நிதிநிலை மேம்படும். இன்று உங்களின் எதிரிகளை எளிதாக சமாளிக்க முடியும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்க பெற்றோரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். இன்று உங்களுக்கு பிடித்த நபர்கள் அல்லது நண்பர்கள் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் விசேஷமான நாளாக அமையும். கடந்த கால தவறுகளில் இருந்து கற்ற பாடத்தை இன்று பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். இன்று அவசரப்படுவதும், உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பதை தவிர்க்கவும். உங்களின் நண்பர்களை சந்தித்து பேசி பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்வீர்கள். புதிய தொழில் அல்லது வேலையை தொடங்க திட்டமிட்டு உள்ளவர்களுக்கு சாதகமான நாள். பங்குச் சந்தை முதலீடு பந்தயங்கள் போன்றவற்றில் இன்று ஈடுபட வேண்டாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு குடும்பத்திலும், பணியிடத்திலும் பரஸ்பர ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று கோபத்தை தவிர்க்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் உங்களை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்படுவீர்கள். இன்று உங்களின் வேலைகளை கண்ணன் கருத்துமாக செய்து முடிக்கவும். எந்த ஒரு முதலீட்டு விஷயத்திலும் நிதானமாக செயல்படவும். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நிதி சிக்கலை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாகவும் நல்ல நேரத்தை செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும். சில புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் இருக்கும். இதனால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று எந்த ஒரு பண பரிவர்த்தனைகளிலும் கவனமாக இருக்கவும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் நிலவும் பிரச்சனையால் சற்று மனக்கவலை அடைவீர்கள். உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தன்மையை மேலதிகாரிகளுக்கு தெரியும் வகையில் நடந்து கொள்வதால் மட்டுமே வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். உங்களின் அன்றாட பணிகள் மற்றும் தேவைகளை எளிதாக நிறைவேற்ற முடியும். வேலை சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பயணங்கள் உங்களுக்கு சாதகமாகவும் லாபம் தரக்கூடியதாகவும் அமையும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களின் குடும்ப பொறுப்புகள் அல்லது வேலை தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் தரக்கூடிய ஆலோசனையை கேட்டு உங்களின் முடிவை எடுக்கவும். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற முயற்சி செய்யவும். குடும்பத்தில் பரஸ்பர ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் திறமை பிரகாசிக்கும் சக ஊழியர்கள் உங்களை கண்டு ஆச்சரியப்படுவார்கள். இன்று யாருக்கும் கடன் கொடுப்பதையோ, யாரிடத்திலும் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தொடர்பான பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
மகர ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: சவால்களை சந்திக்க தயாராகுங்கள்
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக விஷயத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ப்பீர்கள். பெற்றோருடன் ஆன்மீக சுற்றுலா செல்ல முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேர்த்திகளை விட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். காதலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் நிதானமாக நடந்து கொள்ளவும். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு செலவையும் மிகவும் கவனமாக செய்யவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் முதலீடுகள் மூலம் லாபம் எதிர்பார்த்த அளவு கிடைக்காமல் மன வருத்தம் ஏற்படும். இன்று பணியிடத்தில் வேலை பல அதிகமாக இருக்கும் என்பதால் மன வருத்தம் அடைவீர்கள். வெளிநாடு, வெளியூர் தொடர்பான வேலை செய்யக்கூடியவர்கள் நல்ல பாராட்டுக்கள் வாய்ப்புகளை பெறுவார்கள். இன்று உங்களின் பேச்சு செயலில் இனிமையை கடைப்பிடிக்கவும். இன்று உங்களின் வருமானத்தை அதிகரிக்க முடிந்த வரையில் அதிக முயற்சி செய்வீர்கள். உங்களின் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.
- 2023 rasi palan
- 2024 raasi palan
- 2024 rasi palan
- 2024 Rasi Palan in Tamil
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- march raasi palan
- nalaiya rasi palan
- new year rasi palan 2024 in tamil
- pugazh media rasi palan
- raasi palan today
- rasi palan
- rasi palan 2024
- rasi palan today
- rasi palan today tamil
- sun tv rasi palan
- tamil new year rasi palan 2024
- tamil puthandu rasi palan
- today raasi palan
- Today Rasi Palan