maalajam
ஜோதிடம்

பித்ரு தர்ப்பணம்! – இன்று ஆரம்பம்

Share

பித்ரு தர்ப்பணம்! – இன்று ஆரம்பம்

புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் மஹாளய பட்சம் எனும் புண்ணியகாலம் இன்று முதல் தொடங்குகிறது.

இந்த பதினைந்து நாள்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை.

வாழ்க்கையில் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள இவ் மகாளய பட்சம் வழிபாடு உதவுகின்றது.

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்துக்கு வர இயலாது. ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீவதிக்க பூலோகத்துக்கு வருகின்றனர் எனவும்,  பின் தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் செகின்றனர் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த 15 நாள்களும் அவர்கள் நம் வீட்டில்தான் இருப்பார்கள்.

முக்கியமாக மகாளயபட்ச நாளில் அத்தியாவசியப் பொருள்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.

யார் ஒருவர் தன் முன்னோருக்கு அமாவாசை தோறும் தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவரது குடும்பம் அமைதி பெற்று, மங்கள வாழ்வு பெற்று உயரிய நிலைக்கு சென்று கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

ஆகவே ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காக்கும் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டியது மனிதர்களின் கடமையாகும். தர்ப்பணம் செய்வோம். முன்னோர்களின் ஆசி பெறுவோம்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 11 நவம்பர் மாதம் 2025 : 12 ராசிகளுக்கான பலன்கள்

இன்று நவம்பர் 11ம் தேதி, ஐப்பசி மாதம் 25 சந்திர பகவான் கடக ராசியில் சஞ்சாரம்...

MediaFile 1 4
ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் – 27.10.2025

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின்...