home
ஜோதிடம்

வாழ்க்கையை புரட்டிவிடும் சாஸ்திர தவறுகள்

Share

வாழ்க்கையை புரட்டிவிடும் சாஸ்திர தவறுகள்

சாஸ்திரம் எனும் பெயரில் எமது முன்னோர்கள் சில விதிகளை கடைப்பிடித்தனர். நாம் அன்றாடம் எமது வாழ்க்கையில் சில கெட்ட பழக்கங்களானது. எமது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி உடலுக்கும் மனதுக்கும் பிரச்சினைகளையும் தீமையையும் உண்டு பண்ணிவிடும்.

பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் தெரிந்தே இச் சிறுசிறு தவறுகளை செய்து தீமைகளை விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள்.

5679586790gkhjh

ஆனால் இந்த கெட்ட பழக்கங்கள் நம் வாழ்க்கையை எவ்வளவு மோசமாக பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை என்னவென பார்ப்போம்.

படுக்கையில் உணவு உண்ணுதல்

படுக்கும் இடம் : – செவ்வாய்,
சாப்பிடும் இடம்: – சனி
படுக்கும் இடத்தில் அமர்ந்து உண்பதால் சனி + செவ்வாய் சேர்க்கை அடைகிறது. இவ்வாறு சனியும் செவ்வாய்க் கிரகமும் சேர்ந்தால் கடன் தொல்லை தரக்கூடிய தீமை உருவாகும். அதுமட்டுமன்றி சில நோய் தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

சமையல் அறை தவறு
சமையலறையில் அழுக்கான பாத்திரங்களை அதிக நேரம் சிலர் போட்டு வைத்திருப்பார்கள். இது ஆன்மிகத்தின் படி நாம் எஞ்சிய உணவுடன் அழுக்கான பாத்திரங்களை சமையறையில் கழுவாமல் வைத்திருந்தால் அன்னபூரணியை அவமதிக்கும் செயலாகும். இதனால் வாழ்வில் சில பற்றாக்குறைகள் ஏற்படும். பதற்றம் உண்டாகும்.

தூங்குவதற்கு முன்
நித்திரைக்குச் செல்ல முன் சமையலறையில் ஒரு வாளியில் நீர் நிரப்பி வைப்பதால் கடனில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான வழி திறக்கப்படும். அத்துடன் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும் எனக் கூறப்படுகிறது.

குப்பைத் தொட்டி
வீட்டின் பிரதான வாயிலுக்கு அருகில் குப்பைத் தொட்டியை வைத்தலாகாது. அத்துடன் வீட்டுக்கு வெளிப்புறத்திலும் குப்பைத் தொட்டியை வைக்க வேண்டாம். இது உங்கள் அயலவர்களுடனான உறவை கெடுத்துவிடும். அண்டைவீட்டார் எதிரிகளாக மாறிவிடுவர். எனவே மறந்து குப்பை தொட்டியை வீட்டுக்கு வெளியே வைக்கக் கூடாது.

இரவு நேரத்தில்…
சூரிய அஸ்தமனத்துக்குப் பின் பால், தயிர், வெங்காயம் மற்றும் உப்பு போன்ற பொருள்களை யாருக்கும் கொடுக்கக்கூடாது. இவ்வாறு ஒருவருக்குக் கொடுப்பதால் உங்கள் வீட்டு செல்வம் அழியும் என்றும், லட்சுமி தேவி உங்கள் மீது கோபப்படுவார் என்றும் நம்பப்படுகிறது.

வீட்டுக்கு வரும்போது
வெளியே இருந்து வீடு திரும்பும்போது ஒவ்வொரு முறையும் வீட்டினுள் காலடி எடுத்து வைக்கும்போது வலது காலையே எடுத்து வைத்து வருதல் வேண்டும். வலது காலில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் இருக்கிறார்கள் என்றும் இடது காலில் மூதேவி அமர்ந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...