இன்றைய ராசிபலன் 21.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 7, புதன் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் எந்த ராசிக்கு சுப பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என என்ற இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். உங்கள் இனிமையான பேச்சு நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினருக்கு ஆலோசனை வழங்குவீர்கள். உங்களுக்கு நல்ல ஆலோசனை கிடைக்கும். குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். எனவே, மேஷ ராசிக்காரர்கள் இன்று குடும்பம் மற்றும் குழந்தைகளின் விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷப ராசி
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சிறப்பான நாள். முக்கியமான வேலைகள் முடிக்க முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகள் விஷயத்தில் கவனம் தேவை. நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு சிலர் எதிரிகளாக மாறலாம். குழந்தைகளிடம் கவனமாக பேசுவதும் அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட திட்டமிடலாம். தர்ம காரியங்களுக்கு பணம் செலவிடுவீர்கள். எனவே, ரிஷப ராசிக்காரர்கள் இன்று வியாபாரத்தில் கவனமாக இருக்கவும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும்.
மிதுன ராசி
மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாள். நீண்ட தூர பயணம் செல்லலாம். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. முதலீடுகள் நல்ல லாபம் தரும். வியாபாரத்தில் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்களின் உடல்நிலை மற்றும் பிறரின் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்ப உறுப்பினரின் பேச்சால் வருத்தப்படலாம். எனவே, மிதுன ராசிக்காரர்கள் இன்று பயணம் மற்றும் பண விஷயங்களில் கவனமாகஇருக்கவும்.
கடக ராசி
கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் நல்லுறவு பேணவும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பு, ஆராய்ச்சியில் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எனவே, கடக ராசிக்காரர்கள் இன்று வேலை மற்றும் கல்வி விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
சிம்ம ராசி
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று சுற்றுலா அல்லது பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும் நாள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வெளியே செல்ல வாய்ப்பு உண்டு. பெற்றோரிடம் அனுமதியுடன் செய்யும் விஷயங்கள் வெற்றி தரும். உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படும். வியாபார விஷயமாக பயணம் செய்ய நேரிடலாம். வண்டி, வாகனம் கவனமாக ஓட்டவும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். எனவே, சிம்ம ராசிக்காரர்கள் இன்று பயணம் மற்றும் குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வழக்கமான வேலைகளில் மாற்றம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பேச்சில் இனிமையை கடைப்பிடித்தால் நன்மை அதிகரிக்கும். குழந்தைக்கு தேவையான விஷயங்களை நிறைவேற்றுவீர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். உறவினர்களுடன் சேர்ந்து எந்த வேலையும் செய்ய வேண்டாம். இன்று உங்கள் செயலால் பெற்றோர் உங்கள் மீது கோபப்படலாம். உங்கள் வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். எனவே, கன்னி ராசிக்காரர்கள் இன்று வேலை மற்றும் குடும்ப விஷயங்களில் கவனம் வேண்டிய நாள்.
துலாம் ராசி
துலாம் ராசி நண்பர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகளின் செயலால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடல்நலம் பாதிப்பால் கவலைப்படுவீர்கள். என்று நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல நிகழ்வுகள் நடக்கும். எதிரிகளால் தொல்லை வர வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பணியிடத்தில் உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தனலாபம் கிடைக்கக்கூடிய நாள். நிலம், வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். இன்று வீட்டில் விசேஷம், பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். இன்று நண்பர்களுடன் உங்களின் அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து வியாபாரம் தொடர்பாக ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இருப்பினும் புதிய ஒப்பந்தங்கள் விஷயமாக கூடுதல் கவனமாக இருக்கவும். உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும், அதே சமயம் எதிலும் கவனமாக இருக்கவும்.
தனுசு ராசி
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் திறக்கும். நீங்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளிலும் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலை தொழிலில் கவனம் தேவை. இல்லையெனில் ஏமாற்றப்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். அவர்களின் செயல் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்தால் அதில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். இன்று பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பயணங்களில் கவனம் தேவை.
மகர ராசி
மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். அரசு திட்டத்தின் மூலம் நன்மை கிடைக்கும். பெற்றோருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். உங்களின் சிறப்பான செயல்பாட்டால் மன அழுத்தம் குறையும். சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.வேலை தொடர்பாக திட்டமிட்ட காரியங்கள் சரியாக நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த நல்ல லாபம் கிடைக்கும். எனவே, மகர ராசிக்காரர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள்.
கும்பம் ராசி
கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயங்கள் சாதகமான சூழல் இருக்கும். கடன் வாங்க நினைத்தால் எளிதாக கிடைக்கும். பழைய தவறுகள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். சமூகம் தொடர்பான பணி செய்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். விருதுகள் கிடைக்கலாம். வதந்திகளை நம்ப வேண்டாம். வேலையை முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மீனம் ராசி
மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பொதுமக்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சால் வருத்தப்படலாம். இன்று வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. பிறருக்கு அறிவுறை கூற வேண்டாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். அதனால் கூடுதல் முயற்சி செய்தால் நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.