இன்றைய ராசி பலன் 24.07.2023 : Horoscope Today, 24 July
இன்று 24 ஜூலை 2023 திங்கட் கிழமையில் சந்திரன் கன்னி ராசியில் அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.சித்த யோகம் கூடிய சுப தினத்தில் இன்று கும்பம், மீன ராசியில் உள்ள சேர்ந்த பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்திற்க்கு சந்திராஷ்டம நாள். கன்னி, விருச்சிக ராசிக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். 12 ராசிக்கான ராசி பலன் எப்படி இருக்கும் தெரிந்து கொள்வோம்.
மேஷம் இன்றைய ராசி பலன் – Aries
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மனதில் எழும்.
குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும்.
ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவினங்களும் உண்டாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவிவரும் குடும்பத்தில் உள்ள மூத்தவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
சுபச் செலவுகளை பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும் உத்தியோகத்தில் திருப்தியற்ற மன நிலை இருக்கும். இன்று மாலையில் அதிகபட்ச உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உண்டு.
மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்கள் வெற்றியில் முடியும் உங்கள் முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சொந்த தொழில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடுவார்கள் இவற்றில் வெற்றி பெறுவீர்கள். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியில் முடியும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். ஒரு சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் நன்மையில் முடியும்.
கடகம் இன்றைய ராசி பலன் – Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் பல நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும் நாளாகும். வீண் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளவும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் அதை சற்று தள்ளி வைக்கவும். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க வைக்கும்
பிரயாணங்களை பற்றி சிந்திப்பீர்கள். உயர் கல்வியை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு. வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருப்பவர்கள் வெற்றியடைவார்கள்.
சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்க்கும் பல காரியங்கள் வெற்றியடையும் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒரு உறவு அன்னியோன்யமாக இருக்கும்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் சிறிய அளவில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அவற்றை திறம்பட சமாளித்து வெற்றி அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி இன்றைய ராசி பலன் – Virgo
பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட செயல்பட்டு அவற்றில் வெற்றியடைவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
வயதானவர்களுக்கு சற்று உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் ஆரோக்கியத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
துலாம் இன்றைய ராசி பலன் – Libra
கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும் செலவுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு செரிமானம் தொடர்பான தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு பொருள்களில் கவனத்தை கொண்டு செயல்படுங்கள்.
விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio
ராசிக்கு இன்று உடல் நலம் சிறப்பாக இருக்கும். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படக் கூடிய நாள். தொழிலில் மகிழ்ச்சியான அனுபவங்களை அனுபவிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது கடினம். சொல் செயலில் கவனமும், பொறுமையும் தேவை.
திருமண வாழ்வில் உங்கள் துணை உங்களை புரிந்து கொள்வார். காதலில் ஆக்கப்பூர்வமான உறவு நீடிக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். பயனுள்ள வகையிலும், சுப செலவுகளும் ஏற்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஒரு புதிய வருமான ஆதாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius
ஒருசிலருக்கு புதிய மொபைல்போன் வாங்குவது அல்லது வீட்டிற்கு தேவையான எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது என்று இன்றைய நாள் செல்லும் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை இருக்கும்
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn
புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களும் சிந்தனைகளும் ஆதாயம் தருவதாக அமையும். மருந்து மற்றும் மருத்துவ துறை ஆன்மீகத் துறை இயந்திரவியல் வங்கி தொழில் வரவு செலவு போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும்.
உணவு தொழில் மற்றும் வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளின் பிற்பகுதியில் சற்று பின்னடைவு வர வாய்ப்பு உண்டு. இருப்பினும் வெற்றி நிச்சயம்.
கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் சில சுபச் செலவுகள் உங்களை தேடி வரும் ஒரு சில பற்றாக் குறைகள் இருந்தாலும் வெற்றிகரமாக இவைகளை சமாளித்து முன்னேறுவீர்கள்.
குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மனமகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது.
மீனம் இன்றைய ராசி பலன் – Pisces
நேயர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சல்களைத் தவிர்த்துக் கொள்வதும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்ப்பது நல்லதாகும். புதிய தொழில் முயற்சிகள் சற்று தள்ளி வைக்கவும்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இறுதியில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் ஒற்றுமை உண்டாகும்.
- 2023 rasi palan
- 2024 Rasi Palan in Tamil
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- july matha rasi palan 2023
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan
- vendhar tv daily rasi palan
- vendhar tv rasi palan
Leave a comment