இன்றைய ராசி பலன் 21.07.2023 – Today Rasi Palan
இன்று, ஜூலை 21, வெள்ளிக்கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் மகம், பூரம் நட்சத்திரத்தில் இரவும் பகலும் சஞ்சரிக்கிறார். இங்கு சுக்கிரன், சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய சசி மங்கள மற்றும் தன யோகம் ஏற்படுகிறது. இன்றைய அற்புத நாளில் சிம்மம், துலாம், தனுசு உள்ளிட்ட ராசிகளுக்கு மிக சிறப்பானதாக இருக்கும்.
மேஷ ராசி பலன்
இன்று, மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஏனெனில் சில புதிய பொறுப்புகள் கடின சூழல் தரும். கல்வியில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி, வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு சாதக நிலை இருக்கும்.
இன்று நீங்கள் எதிலும் வெற்றி பெறலாம். குடும்ப வாழ்க்கையில், இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து மகிழ்ச்சியையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள், அரசாங்க வேலையில் வெற்றி பெறுவீர்கள். வெற்றிக்காக நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.
ரிஷபம் ராசிபலன்
இன்று ரிஷபம் ராசிக்காரர்கள் உங்கள் பணியிடத்தில் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி மன அழுத்தம் தருவதாக இருக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் வேலை செய்பவர்களும், இடைத்தரகர்களும் நல்ல வருமானம் பெறுவார்கள்.
வாகனத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
இன்று உங்கள் வியாபாரம் அல்லது குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களுக்காகப் பயணிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் தாயாரின் மகிழ்ச்சியும், பாசமும் பெறுவீர்கள். சிலரின் நடவடிக்கை உணர்ச்சிவசப்பட வைக்கும்.
மிதுனம் ராசிபலன்
மிதுன ராசியினருக்கு இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று சமூக அல்லது சமய நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. தொலைதூரத்தில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் சில நல்ல செய்திகள் கேட்கலாம்.
உங்கள் உடல் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். முதலீடும் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள்.
கடக ராசி பலன்
இன்று கடகம் ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் டென்ஷன் தீரும். பணியிடத்தில், உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியும், இதன் காரணமாக உங்கள் வருமானமும் நன்றாக இருக்கும்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாக முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மாலையில் சற்று சோர்வை உணர்வீர்கள். இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பீர்கள். நீங்கள் சமூகப் பணிகளில் ஈடுபடலாம்,
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் பணியிடத்தில் ஊக்கமும் மரியாதையும் பெறலாம். உங்களின் வேலை திறன் சிறப்பாக இருக்கும். சமூகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் கடன் கொடுத்திருந்தால், இன்று அதை திரும்பப் பெற சாதக நாள். மாணவர்களின் கல்வியில் சற்று தடை நீங்கும். இன்று வீட்டிற்கு விருந்தினர் வருகையால் வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். மாலையில் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
கன்னி ராசி பலன்
இன்று முதலீடு விஷயங்களில் கவனம் தேவை. வேலை சார்ந்த விஷயங்களில் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். இன்று உங்களின் எதிர்கால திட்டங்களுக்காக சில முதலீடுகளையும் செய்வீர்கள். இன்று வாழ்க்கைத் துணையுடன் மனவருத்தம் தீரும். முன்னர் செய்த முதலீடு உங்களுக்கு லாபத்தைத் தரும். இன்று நீங்கள் உங்கள் வேலையில் சில மாற்றங்களைச் செய்ய சாதக நாள். இன்று மாலை குடும்பத்துடன் உல்லாசமாக செலவிடுவீர்கள்.
துலாம் ராசி பலன்
இன்று துலாம் ராசிக்காரர்கள் கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் ஏற்ப பண பலன் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆனால் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த முயல்வது நல்லது. இன்று குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருக்கு உதவ முன் வருவீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.
விருச்சிகம் ராசிபலன்
இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி விஷயங்களில் கவனம் தேவை. நிதானமாக செயல்படவும். பணம் சம்பாதிக்க அலைச்சல் ஏற்படும். இன்று உங்கள் குடும்பத்தில் சில சுப நிகழ்வுகள் குறித்து விவாதிக்கலாம். உங்கள் சகோதரருடனான உறவில் விரிசல் தீரும்.
தனுசு ராசிபலன்
தனுசு ராசிக்காரர்கள் இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடமிருந்து அனுகூலமும், ஒத்துழைப்பையும் பெறுவார்கள். அதிர்ஷ்டமான நாள் என்பதால் தனயோகத்தால் இன்று பண பலனைப் பெறுவீர்கள். பெற்றோரின் உடல்நிலை சீராகும். நீண்ட நாட்களாக உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், உங்கள் முழு மன நாட்டம் இருக்கும். இன்று நீங்கள் உற்சாகமான செயல்பட்டு நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு ஏற்படும். உறவினர்களுடன் தகராறு தீரும். மாமியார் வீடு மூலம் மரியாதையைப் பெறுவீர்கள்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்காரர்கள் இன்று உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் சிந்தனையுடன் செயல்படவும். தொண்டு வேலைகளில் நல்ல பெயர் கிடைக்கும். கடின உழைப்புக்குப் பிறகு வெற்றியைப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். சொத்து வாங்க, விற்பதில் சாதகமன பலன்கள் கிடைக்கும்.
இன்று செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் குடும்ப பொறுப்புகள் மற்றும் தேவைகளுக்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இன்று கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
மீன ராசி பலன்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பல விஷயங்களில் சாதகமற்றதாக இருக்கும். இன்று உங்களுக்கு கோபமும் அதிகமாக வரும். அதனால் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தவும். சில தவறான புரிதல்களால் மனம் குழம்பும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத் தொழிலில் மேன்மை உண்டாகும். சகோதரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று பொருளாதார விஷயங்களில் கவனமாகச் செயல்படவும்.
- 2023 rasi palan
- 2024 Rasi Palan in Tamil
- daily palan
- daily rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- kumbam rasi palan 2024 in tamil
- magaram rasi palan 2024 in tamil
- meenam rasi palan 2024 in tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- sithariyal maruthuvam rasi palan
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan
Leave a comment