இன்றைய ராசி பலன் 08.07.2023 -Today Rasi Palan
இன்று ஜூலை 8 ஆம் தேதி,சனி இன்று சந்திரன் கும்ப ராசியில் சதயம், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். கடக ராசியின் ஆயில்யம் நட்சத்திரதிற்கு சந்திராஷ்டம நாள். இன்று சனி மற்றும் சந்திரன் சேர்ந்து சஞ்சரிக்கக்கூடிய நாளின் ரிஷபம், துலாம் ராசியினருக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மேஷம் இன்றைய ராசி பலன் – Aries
பெண்களுக்கு சொத்துக்கள் வாங்குவது ஆடை ஆபரணச் சேர்க்கை அமைவது போன்ற நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வார்கள்.
உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கான பல நல்ல நிகழ்வுகள் உண்டாக வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும் உயர்கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கும் ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்களுக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus
வீடு கட்டுவது தொடர்பான அல்லது சொத்துக்கள் வாங்குவது தொடர்பான காரியங்களில் ஈடுபடுவீர்கள். இவர்களின் வெற்றி கிடைக்கும் அன்பர்கள் சிறந்த நாள் ஆகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.
புதிய வாகனங்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு இனிமையான நாளாக உங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வழி உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களை தரக்கூடிய நாளாக இருக்கும். பலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வந்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். இவற்றால் லாபம் பெறுவீர்கள் வாகன வகையில் செலவினங்கள் உண்டாகும்.
கடகம் இன்றைய ராசி பலன் – Cancer
நேயர்களுக்கு இன்றைய நாள் சந்திராஷ்டமம் உள்ளது. ஆகவே வீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.
உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சற்று அனுசரித்து செல்ல வேண்டும்.
சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் ஓரளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்குச் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பிரயாணங்கள் சித்திக்கும் இவற்றால் நன்மையும் உண்டாகும்.
கன்னி இன்றைய ராசி பலன் – Virgo
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் அன்னியோனியம் சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தாய்நாடு சென்று வர எண்ணம் கொண்டிருப்பார்கள். இவைகளை செயல்படுத்தலாம் உத்தியோகஸ்தர் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
துலாம் இன்றைய ராசி பலன் – Libra
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் அவற்றை திறம்பட எதிர்கொண்டு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும்.
விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை நன்றாக இருக்கும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வழி உண்டாகும். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது எதிர்கால முதலீடு போன்றவற்றைப் பற்றி திட்டமிடுவார்கள். இவைகளில் வெற்றி கிடைக்கும் பல புதிய வழிகளில் தென்படும்.
தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius
குடும்பத்தில் அன்யோன்யம் சிறப்பாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள்.
உத்தியோகத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். உத்தியோகத்திற்காக பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn
கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தாய் நாடுகளைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும்.
உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.
கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius
பலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு பிரயாணங்களால் நன்மையே கிடைக்கும். ஆகவே தைரியமாக பிரயாணங்களை மேற்கொள்ளலாம் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை தீர்வுக்கு வரும். காதல் தொடர்பான பிரச்சினைகளில் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் நல்ல நாளாகும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பீர்கள்.
குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு விருந்தினர் வருதல் இவைகளால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.
மீனம் இன்றைய ராசி பலன் – Pisces
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது வாகனங்கள் வாங்குவது இவற்றிற்காக கடன் பெற வேண்டியது வரலாம். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு காலதாமதமானாலும் வெற்றி கிடைக்கும் தன வரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும்.
- 2024 Rasi Palan in Tamil
- daily rasi palan
- daily rasipalan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- kumbam rasi palan 2024 in tamil
- magaram rasi palan 2024 in tamil
- meenam rasi palan 2024 in tamil
- nalaiya rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- sithariyal maruthuvam rasi palan
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- today palan
- today rasi palan in tamil
- today rasipalan
- tomorrow rasi palan
- viruchigam rasi palan 2024 in tamil
- இன்றைய ராசி பலன்
Leave a comment