இன்றைய ராசி பலன் 28.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பம் அல்லது நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள், பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில், லாபத்திற்கான வாய்ப்புகள் சிறப்பாக. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் திருமண உறவில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கூடுதல் ஆற்றலுடன் உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமான வாய்ப்பு, சேமிப்பதற்கான சாதக சூழல் நிலவும். பிள்ளைகள் தொடர்பான விஷயத்தில் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவீர்கள். வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பேச்சு மற்றும் நடத்தையால் பிறரை ஈர்ப்பீர்கள். பணியிடத்தில் எதிரிகளை எளிதாக சமாளிக்க முடியும். திட்டமிட்ட வேலைகளை சிந்தனையுடன் செயல்பட்டு செய்து முடிக்க முடியும். உங்களின் வரவு செலவு தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். தொழில் துறையில் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான சாதக வாய்ப்புகளை பெறுவீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான சாதக சூழல் நிலவும். உங்கள் பேச்சில் இனிமையை பராமரிக்க வேண்டிய நாள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நேர்மறையான செயல்பாடு பெரிய வெற்றியை பெற்றுத்தரும். உங்கள் அனுபவத்தால் கடின சூழலை சமாளிப்பீர்கள். உங்கள் வேலைகளை முன்பை விட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு லாட்டரி போன்று அதிர்ஷ்டம் அடிக்கும் நாள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமைய கூடிய நாள். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று ஆன்மீக நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுகிறீர்கள். பழைய தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்கிறீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று இது சார்ந்த விஷயங்களில் சாதகமான நாள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான இனிமையான சூழல் நிலவும். இன்று ஆடம்பரமான பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது. உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக கவனித்துக் கொள்வது நல்லது .
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக அமையும்.இன்று உங்களுக்கு பல வழிகளில் இருந்து சாதகமான பலன்களும், நிதி வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களின் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தடைபட்ட பழைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். மூதாதையர்களின் சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகள் தீரும். முதலீடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன்கள் கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வணிகம் தொடர்பான விஷயங்களில் சாதக பலன்களை பெறுவீர்கள். இன்று நீங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். சில புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் சிக்கல் தீர்ந்து, நிவாரணம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் கோபத்தை குறைத்து, பேச்சு கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு செயலிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும். பணியிடத்தில் உங்களின் எதிரிகள் அதிகம் செலுத்த வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று பல வேலைகள் செய்து முடிக்க வேண்டிய சூழல் இருக்கும். பணி சூழல் கடுமையானதாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மதிப்பும் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் ஈகோவை விடுத்து, அனுசரித்து நடந்து கொள்ளவும். இன்று உங்களின் சொத்து தொடர்பான விஷயங்களில் சாதக பலன்கள் கிடைக்கும். நீதி சூழல் சாதகமாக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சட்டம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். தொழில், வணிகம் தொடர்பான விஷயத்தில் புதிய திட்டங்கள் அல்லது கருவிகளை பயன்படுத்துவீர்கள். வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடியவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். குழந்தைகள் தொடர்பான விஷயம் கவலை தரும்.
- 2023 rasi palan
- 2024 rasi palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan 2024
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- raasi palan today
- rasi palan
- rasi palan 2024
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil rasi palan
- today raasi palan
- Today Rasi Palan