இன்றைய ராசி பலன் 20 மே 2025 – Daily Horoscope

tnadi 1

​Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (மே 20, 2025 செவ்வாய்க் கிழமை) இன்று சந்திரன் பகவான் கும்பம் ராசியில் அவிட்டம், சதயம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று மீனம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வழிகள் திறக்கும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவர் சொன்ன ஒரு விஷயத்தால் வருத்தப்படலாம். உங்களிடம் வாக்குவாதம் செய்பவர்களிடம் அமைதியாக கடந்து செல்வது நல்லது. இல்லையென்றால் அது சட்ட சிக்கலாக மாறலாம். குடும்ப பிரச்சனைகள் உங்களை கவலையடையச் செய்யும். உங்கள் குழந்தைகளிடமிருந்து ஏமாற்றமளிக்கும் செய்திகளைக் கேட்க நேரிடலாம். இணையத்தில் வேலை செய்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.

ரிஷப ராசி

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். குறுகிய தூர பயணத்திற்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து முக்கியமான முடிவு எடுக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அங்கு செல்வாக்கு மிக்க சிலரை சந்திப்பீர்கள். பெற்றோரின் கண் மற்றும் கால் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அதில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். பழைய கடன் ஏதேனும் இருந்தால், அதை திருப்பிச் செலுத்துவதில் வெற்றி பெறுவீர்கள்.

மிதுன ராசி

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் நல்ல எண்ணங்களுக்கு சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் மனதில் போட்டி எண்ணம் இருக்காது. உங்கள் பிரச்சனைகளை அமைதியாக தீர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம். உங்கள் வீட்டிற்கு உறவினர் வரலாம். அதனால் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சிறிய குழந்தைகள் உங்களுடன் சந்தோஷமாக விளையாடி மகிழ்வீர்கள். அதனால் உங்கள் கவலைகள் குறையும்.

கடக ராசி

கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று சொத்து வாங்க நல்ல நாள். பூர்வீக சொத்து கிடைத்தால் உங்கள் செல்வம் அதிகரிக்கும். யாரிடமும் ஆணவமாக பேச வேண்டாம். இல்லையென்றால் அவர்கள் உங்கள் வார்த்தைகளால் வருத்தப்படலாம். முக்கியமான வேலை பற்றி உங்கள் பெற்றோரிடம் பேசலாம். உங்கள் சகோதரர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். நண்பரின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். புதிய முதலீட்டில் பணம் போடுவது உங்களுக்கு நல்லது.

சிம்ம ராசி

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலை அதிகமாக இருக்கும். வியாபாரத்தை கவனிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். அதனால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நாள். உங்கள் மனதில் உள்ள ஆசையை பற்றி பேசலாம். உங்கள் வாழ்க்கைத் துணைவியின் தொழில் சம்பந்தமாக இருந்த பதற்றம் நீங்கும். கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். கேட்காமல் யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இன்று முடிக்க முடியும். உங்கள் பணியிடத்தில் வேலை தொடர்பான பொறுப்புகளை சரியாக செய்து முடிக்கவும். வேலைப்பளு இருக்கும் என்பதால் சரியான திட்டமிடலுடன் செயல்படுவது நல்லது. விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டிய நாள். வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. ஏதாவது திட்டத்தில் பணம் முதலீடு செய்திருந்தால், நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களின் உயர்கல்விக்கு வழி கிடைக்கும். தந்தைக்கு கண் தொடர்பான பிரச்சனை வரலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலனில் கவனம் தேவை. பழைய நோய் திரும்ப வரலாம். உங்களின் ஒவ்வாமை தொடர்பான விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டிய நாள். வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீரும். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவீர்கள். அது தொடர்பாக முக்கியமான முடிவு எடுக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் படிப்பில் உள்ள பிரச்சனைகளை பற்றி ஆசிரியர்களிடம் பேசி தெளிவு பெறுவது நல்லது. ஒரு முக்கியமான நபரை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்திகள் கிடைக்கும். பழைய நோய் திரும்ப வரலாம். அதனால் கவலைப்படுவீர்கள். யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். பழைய தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், விருது கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர் உங்களை பார்க்க வரலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். எதிராளி விஷயங்களில் கவனம் தேவை. முக்கியமான விஷயத்தில் பெற்றோரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் சண்டை, சச்சரவுகளை விடுத்து இணக்கமாக செல்ல வேண்டிய நாள். எனவே உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகத்தில் உங்கள் வேலையை விட மற்றவர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதனால் உங்கள் வேலை தடைப்படலாம். சுற்றுலா அல்லது வேலை தொடர்பான பயணம் செல்ல திட்டமிட்டால், உங்கள் பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய வேலை தொடங்க நல்ல நாள். மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள். நண்பரின் உடல்நிலை பற்றி கவலைப்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சில வேலைகளுக்காக பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் தடை நீங்கும். அதனால் குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.பணியிடத்தில் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் இன்று பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்காவது பணம் கொடுத்தால், அது திரும்ப கிடைப்பது கஷ்டம். பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. சில வேலைகள் முடியாமல் போவதால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பேச்சால் உங்களின் பெற்றோர் வருத்தப்படலாம். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி கேட்கலாம். வியாபாரத்தில் தடைபட்ட ஒப்பந்தம் முடிவடையும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வேலையில் பிஸியாக இருப்பீர்கள். குடும்ப பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து முக்கியமான முடிவு எடுக்கலாம். அதற்கு பெரியவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சொத்து சம்பந்தமான தகராறு இருந்தால், அனுபவம் உள்ள ஒருவரின் ஆலோசனையால் தீர வாய்ப்பு உண்டு. வேலை விஷயமாக குறுகிய தூர பயணம் செல்ல வேண்டியிருக்கும்.

Exit mobile version