இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

tamilnaadi

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திராடம், திருவோணம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் துணையுடன் நம்பிக்கையும், அன்பும் அதிகரிக்கும். உங்களின் முந்தைய முயற்சிகள் மூலம் நற்பலன்களை பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை, பணியிடத்தில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக சூழலை கையாளவும். இன்று எந்த செயலிலும் கூடுதல் விழிப்புணர்வு தேவை.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று திருமண உறவில் காதல் அதிகரிக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். தொழில் மற்றும் வேலை தொடர்பாக சில பிரச்சினைகள் எதிர்கொள்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். தொழில் சார்ந்த முயற்சிகளில் கருத்து வேறுபாடுகள், நிதி பின்னடைவுகள் ஏற்படும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று காதல் தொடர்பான விஷயத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இன்று உங்களின் வசதி அதிகரிக்க வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கையில் பரஸ்பரப் புரிதல் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகள் நன்மை தரும். இன்று உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவும் இருக்க வேண்டாம். என்று காதல் வாழ்க்கையில் புரிதல் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். உங்களின் சிந்தனையை நேர்மறையான தாக்கத்தைத் தரும். வாழ்க்கையில் வெற்றிக்கான வழி அதிகரிக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் சாதகமானதாகவும், வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றியும், திறமையை நிரூபிக்கவும் வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று திருமணம் மற்றும் காதல் தொடர்பான விஷயங்களில் கண்டுபிடிக்கும். இன்று நாள் முழுவதும் உற்சாகமான மனநிலையுடன் இருப்பீர்கள். தொழில் தொடர்பாக சாதகமான சூழல் இருக்கும். குறைந்த முயற்சியில் அதிக பலன் கிடைக்கும். புத்திசாலித்தனம் செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்கள் வேலையை பாராட்டுவார்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். இன்று உங்கள் செயல்பாடுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் மூலம் பண லாபம் அதிகரிக்கும். இன்று பேராசைப்பட்டு எந்த ஒரு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகள் நிறைந்ததாக இருக்கும். துணை மீது அன்பு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் பேச்சு மற்றும் செயலை நல்ல வழியில் கட்டுப்படுத்துவது நல்லது. ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று லட்சிய திட்டங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டு. தொழில் முயற்சிகள் விரிவடையும். உங்களின் கடின உழைப்பிற்கான பாராட்டைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் சிறப்பான சூழல் நிலவும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உறவுகளை அனுசரித்து செல்லவும். இன்று உங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கவும். தொழில் தொடர்பாக சாதகமான முடிவுகள் கிடைக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். உத்தியோகஸ்தர்களின் நிலை மேம்படும். குடும்பத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை இருக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நல்லிணக்கம் மேம்படும். தவறான முடிவுகளை விடுத்து சிக்கலை தீர்க்க நிதானமாக முயற்சி செய்யவும். இன்று உங்களின் விரிவாத குணத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் முனைவோருக்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கும். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவை பெறுவீர்கள். இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்க தாமதம் ஏற்படும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப சூழ்நிலை மிகவும் சமூகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இணக்கமான சூழல் அதிகரிக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். தொழில் தொடர்பான கடின உழைப்பு நேர்மறையான பலனை பெற்று தரும்.

Exit mobile version