இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள சேர்ந்த மூலம், பூராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணிகளை சிறப்பாக முடிக்க தைரியமும், ஆற்றலும் பிறக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். தொழில் முறை அழுத்தங்களை கட்டுக்குள் வைப்பீர்கள். வாழ்க்கைத் துணையிலேயே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பேச்சு, நடத்தையில் நிதானம் தேவை. தொழில் தொடர்பாக விரைவாக முடிவெடுப்பீர்கள். புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த நினைப்பீர்கள். உங்களின் சிறப்பான அணுகுமுறை நல்ல பலனளிக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். நிறைய பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. குடும்ப சூழ்நிலை சமூகமாக இருக்கும். வீட்டில் அமைதியான சூழல் உருவாகும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக பிறரின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் முயற்சிகளில் எந்த அளவுக்கு அதிகரிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இணக்கமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் விலகும். இன்று எந்த செயலிலும் நிதானம் அவசியம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான செயல்களில் வெற்றி கிடைக்கும். எந்த துறையில் இருந்தாலும் அதில் சாதகமான சூழல் உருவாகும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றம் தரக்கூடிய வாய்ப்புகள். கிடைக்கும். காதல் உறவில் சாதகமான சூழல் இருக்கும். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் இணக்கமான சூழல் இருக்கும். சுக போக பொருட்களுக்காக அதிகமாக செலவிடுவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க தைரியமும், சக்தியும் இருக்கும். வணிகத்தில் புதிய உயரங்களை தொடுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. சிலருக்கு விரும்பிய இடம் மாற்றம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழல் இருக்கும். பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை முன்னெடுத்துச் செல்வீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பான முன்னேற்றம் உண்டாகும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம். பணியிட சூழல் சாதகமானதாக இருக்கும். சொத்து வாங்குதல், விற்பது தொடர்பாக ஆவணத்தை சரியாக படிக்காமல் கையெழுத்திட வேண்டாம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கும் முன்னேற்றம் அதிகரிக்கும். இன்று நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் அதிகாரத்தை பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றியை தரும். புத்திசாலித்தனத்தால் வெற்றி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் அன்பை ஆதரவையும் பெறுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பாக சாதாரண முடிவுகளை பெற கடின உழைப்பு தேவைப்படும். உங்களின் எதிர்பார்த்த வேலைகள் சரியாக செய்து முடிக்க முடியும். தொழில் தொடர்பான புதிய திட்டங்கள் செயல்படுத்துவதில் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு. காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் கல்விக்காக முயற்சிக்க கூடிய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று விரும்பிய இலக்கை அடைய அதிக முயற்சி தேவைப்படும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். வேலை, வணிகம் தொடர்பாக நல்ல லாபத்தை பெறலாம். இன்று எந்த ஒரு முதலீடு, பெரிய பணப்பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது அவசியம். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனமாக செயல்படவும். குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்லவும். படிப்பு தொடர்பான கடின உழைப்பு தேவைப்படும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றத்திற்கான சிறப்பான சூழல் நிலவும். இன்று எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஆழமாக சிந்திக்கவும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான லாபம் கிடைக்கும். எதிரிகளால் உங்கள் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும். தனிப்பட்ட உறவுகளை அனுசரித்து செல்லவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் இலக்கை அடைவதற்காக அதிக முயற்சி தேவைப்படும். தொழில் தொடர்பாக கடினமான சூழல் இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளை சிக்கல் ஏற்படும். இன்று சச்சரவுகளையும், தடைகளையும் சமாளிக்க நிதானமாக சிந்தித்து செயல்படவும். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வணிகம் தொடர்பான முயற்சிகளில் கணிசமான வளர்ச்சி இருக்கும். இன்று பணியிடத்தில் சக ஊழியர்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனத்தை லாபம் அதிகரிக்கும். காதல் தொடர்பான விஷயத்தில் சூழல் சாதகமாக இருக்கும். இன்று விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
- 2025 rasi palan
- daily raasi palan
- dina rasi palan
- Featured
- indraya raasi palan
- indraya rasi palan
- kanni raasi palan
- kumba raasi palan
- kumbam raasi palan
- kumbam rasi palan
- nalaiya rasi palan
- raasi palan tamil
- ramji rasi palan
- ramji rasi palan 2025
- rasi palan
- rasi palan 2024
- rasi palan 2025
- rasi palan today
- rasi palan today tamil
- sun tv rasi palan
- tamil raasi palan
- tamil raasi palan today
- today raasi palan
- Today Rasi Palan
- Today Rasi Palan Tamil