இன்றைய ராசி பலன் 29.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் மார்ச் 29, 2024, சோபகிருது வருடம் பங்குனி 16 வெள்ளிக் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் நல்ல பதவி கிடைக்கும். நல்ல செய்திகள் தேடிவரும். சகோதர, சகோதரிகளுடன் நான் என்ன கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். சோம்பலைக் கைவிட்டு சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய நாள்.
யோகம் தரும் சனியின் மாற்றம் : தொழில் பிரகாசிக்க உள்ள 4 ராசிகள்
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வங்கித் துறையில் பணிபுரிபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பேச்சு, செயலைப் பார்த்து பிறர் நட்பு பாராட்டுவார்களின். உங்கள் மரியாதை கூடும் . வேலைகளில் உங்கள் மனைவியின் ஆலோசனை உங்களுக்குத் தேவைப்படும், திட்டமிட்ட வேலை முடிவடையும். உங்கள் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். நீங்கள் தனித்துவமான செயல்படுவீர்கள், இன்று ஏழைக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக அதைச் செய்யுங்கள். நீங்கள் வேலைகளில் முன்னேற்றம் அடைவீர்கள். ஆக்கப்பூர்வமான உங்களின் செயல்பாடு முன்னேற்றத்தைத் தரக் கூடியதாக இருக்கும். உங்கள் புகழ் எங்கும் பரவும். உங்களின் நம்பிக்கையான செயல்பாட்டால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் வாங்கி இருக்கக் கூடிய கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு தொடர்பாக வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று பிறரிடம் மிகவும் கவனமாக பேசுவது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். நண்பர்களிடம் இருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். தற்பெருமை பேசுவதும், ஆணவத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் துரிதமாக செயல்படுவீர்கள். இன்று யாரிடமும் கடன் வாங்குவது, கொடுத்ததை தவிர்க்கவும். திருமண வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலத்திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்ற முடியும். ஆட்சி அதிகாரத்தில் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் சிந்தனை சிறப்பானதாக இருக்கும். பிறரிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் சற்று பலவீனமாக உணர்வீர்கள். தொழில் முயற்சிகளில் நிதானம் தேவை..
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். இன்று ஒன்றுக்கும் மேற்பட்ட மூலங்களிலிருந்து வருமான வாய்ப்பை பெறுவீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சி அடைவீர்கள். நேரத்தை செலவிடுவீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள்..
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். முக்கிய விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் அறிவுரையை எடுத்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆதரவை பெறுவீர்கள். முக்கியமான வேலைகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறீர்கள். குடும்பத்தில் சில சுப காரியங்களை செய்ய திட்டமிடுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் முக்கியமான வேலைகள் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். மேலும் புதிய சொத்துக்களை வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறீர்கள். பேச்சில் இனிமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு இனிமையான சூழல் அமையும். பணம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. வரவு செலவுகளில் நிதானம் தேவை. உங்களின் பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை.. வேலை தேடக்கூடிய நபர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான மனநிலை இருக்கும். தியாக உணர்வும், பிறரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்கொள்ள கூடிய பிரச்சனைகள் குறையும். பணியிடத்தில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் பரிசு, பாராட்டுகளை பெறுவார்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் நல்ல முடிவுகளை பெற சகோதரர்களின் ஆலோசனை தேவைப்படும். தனிப்பட்ட விஷயங்களை, மேன்மை அடைவீர்கள். தகராறுகள் தீரும். வீடு, வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். குடும்பம் சார்ந்த பொறுப்புகள் நிறைவேறும்.