இன்றைய ராசிபலன் மார்ச் 19, 2024, சோபகிருது வருடம் பங்குனி 6, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான விஷயங்களில், ஆவணங்களை மிக கவனமாக சரி பார்க்கவும். வியாபாரத்தில் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டிய காலம். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்களின் செயலுக்கு பாராட்டு கிடைக்கும். பெரிய இலக்கை அடைய கடினமாக உழைப்பீர்கள். பிறருக்கு அறிவுரை வழங்கும் விஷயத்தில் கவனமாக சிந்தித்து செயல்படவும். வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்கள், அதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பதவி, கவுரவம் உயரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலை மற்றும் மன சிக்கல் குறித்து உங்கள் பெற்றோருடன் பேசலாம். பணியிடத்தில் உங்களின் அனுபவம் சிறப்பான பலனைத் தரும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவும். இன்று வேலையை முடிப்பதில் கண்ணன் கருத்துமாக செயல்படவும். நேரத்தை வீணடிக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஆபத்தான எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். சிலரின் அறிவுரைகள் உங்களுக்கு நற்பலனை தரும். வியாபாரிகளுக்கு சற்று பலவீனமான நாளாக இருக்கும். அன்றாட வாழ்க்கையில் உங்களின் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். வேலையில் கவனக் குறைவுடன் இருப்பதை தவிர்க்கவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறக்கூடிய அனுகூலமான நாளாக இருக்கும். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். புதிய சொத்து வாங்குதல் தொடர்பான விஷயங்கள் சாதக பலனை தரும். உங்கள் தொழிலில் நல்ல லாபத்தை பெறலாம். புதிய சாதனைகள் செய்த மகிழ்ச்சி அடைகிறீர்கள். உங்களின் ஆடம்பரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் பணம் அதிக அளவில் செலவாகும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபார ரீதியாக பலவீனமான நாளாக இருக்கும். இன்று எதிரிகளை சமாளிப்பது மன உளைச்சல் ஏற்படும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுறுசுறுப்பான நாளாக அமையும்.. தொழில் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகளை கேட்பீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல ஆதரவை பெறுவீர்கள். மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இன்று கோபப்படுவதைத் தவிர்க்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும் நாள். பணியிடத்தில் உங்களின் அனுபவத்தின் முழு பலனை பெறுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் சிறப்பான பலனைத் தரும். உங்களின் வசதிகள் அதிகரித்துக் கொள்வதற்கான நாள். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு புதிய வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு சாதக பலன்கள் கிடைக்கும். உங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் சிறப்பாக செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற முடியும். சகோதரர்களுடன் ஆன உறவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் விலகி, அவர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பண விஷயத்தில் சிறப்பான நாளாக அமையும் நீங்கள் செய்த பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யக்கூடியவர்கள் மிக கவனமாக உங்கள் வேலைகளை செய்து முடிக்க வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களின் திருமணம் முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும். குடும்ப சூழ்நிலை இனிமையானதாக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களின் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களின் பேச்சு மற்றும் நடத்தையின் மூலம் மற்றவர்களின் மனதில் இடம்பெறுவீர்கள். பணியிடத்தில் நற்செயல்களை கேட்பீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
- 2023 rasi palan
- 2024 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan 2024
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan today
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil rasi palan
- Today Rasi Palan
- vaara rasi palan
- vara rasi palan
- weekly rasi palan