இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் மே 8, 2024, குரோதி வருடம் சித்திரை 25, புதன் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள ரோகிணி, பூரம், உத்திரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம். கடின உழைப்புக்கேற்ற பலன் உண்டாகும். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். இன்று யாரையும் அதிகமாக நம்ப வேண்டாம். குடும்பத்தில் உங்கள் கோபத்தையும், சண்டைகளைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் மனம் பொழுதுபோக்கில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் மீது ஆன நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதனால் பணியிடத்தில் உங்களின் வேலைகளை சரியாக திட்டமிட்டு, கவனமாக சரியான நேரத்தில் செய்து முடிக்க முயற்சி செய்யவும். ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் சிரமங்களை சந்திக்க நேரிடும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பிரிகள். உங்களின் சுயமரியாதை அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான சூழல் இருக்கும். உங்களின் ஆரோக்கியம், வேலைகளை செய்து முடிப்பதில் பிரச்சனை தரக்கூடியதாக இருக்கும். இன்று குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். வேலைகளை முடிப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். நிதி விஷயத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியம் தொடர்பாக செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். உங்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறலாம். அதிர்ஷ்டத்தின் ஆதரவால், வேலைகள் முடிக்க முடியும், செல்வ நிலை அதிகரிக்கும். உங்களின் பழைய முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் பெற்றிடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் வெற்றி அடைய உள்ளீர்கள். எதிர்காலம் தொடர்பான முதலீடு விஷயங்களை ஆராய்வீர்கள். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனைவியுடன் உறவில் இனிமை, காதல் அதிகரிக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மிகச் சிறப்பான நாள். அன்றாட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய. திருமண வாழ்க்கையில் காதல் மலரும். உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து பாராட்டு தெரிவிப்பீர்கள். அரசு வேலையில் உள்ளவர்கள் சலுகைகளை பெறுவீர்கள். உங்கள் அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று எந்த வேலையிலும் ஆர்வக்கோளாறாக செயல்பட வேண்டாம். சரியாக திட்டமிட்ட செயல்பட நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உடன் பிறந்தவர்களுடன் உறவு மேம்படும். திருமண வாழ்க்கையில் காதல் மலரும். உத்தியோகத்தில் மிகவும் பிசியாக செயல்படுவீர்கள். அரசு வேலைக்கு தயாராக கூடிய நபர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். இன்று அறிவித்து வரும் உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று உங்களின் குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். அதே சமயம் உங்களின் பேச்சை பிறர் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் உண்டாகும். உங்கள் வேலையை முதலாளிகளால் பாராட்டப்படலாம். இன்று நீங்கள் பெரிய வெற்றியை பெற முடியும். குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதால் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உங்களின் வருமானம் அதிகரிக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களையும் நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்களை கிடைக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்வோம். தொழில், வியாபாரத்தில் நிச்சயமற்ற சூழ்நிலை இருக்கும். உங்களின் இலக்குகளை அடைய சரியான திட்டமிடல் அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பம் மற்றும் வேலையை சமநிலையில் பராமரிக்கவும். மாணவர்களுக்கு படிப்பையும் முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் அக்கறை தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் அழகான நாளாக அமையும்.. உங்களின் மன நிம்மதி அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளை சிறப்பாக தீர்ப்பீர்கள். வேலையில் சிறப்பாக செயல்படுவதோடு நிதி ஆதாயங்களையும் பெறுவீர்கள். இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேற்ற செலவுகள் அதிகரிக்கும். இன்று சுப விரயங்களை செய்து மகிழ்ச்சி அடைவார்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மிக கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் மிக கவனமாகவும், சிந்தித்து எடுக்கவும். முடிவுகள் இருப்பதில் பிறரை முழுமையாக நம்ப வேண்டாம். இன்று எல்லா விஷயத்திற்கும் எதிர்வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து செயல்படவும். இன்று குடும்பத்தில் சச்சரவுகளை சந்திக்க நேரிடும். உங்களின் கோபத்தால் உங்கள் வேலை தடைப்பட வாய்ப்புள்ளது. நிதானத்துடன் செயல்பட வெற்றி நிச்சயம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பும், கவனமும் தேவை. இன்று உங்களின் பழைய தவறுகளில் இருந்து அனுபவப் பாடத்தை செயல்படுத்துவீர்கள். வேலையில் திட்டமிட்டு செயல்பட குறித்த நேரத்தில் முடிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடமும், வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இணக்கமாகச் செயல்படவும். இன்று உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. உடல்நிலை மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் உடல்நலம் தொடர்பாக அலட்சியமாக இருக்க வேண்டாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களின் புத்திசாலித்தனத்தால் பிரச்சனைகளை சிறப்பாக சமாளிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் நல்ல ஆதரவை பெறுவீர்கள். உங்களின் திட்டம் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்களின் நிதிநிலைமை மேம்படும் என்பதால் சேமிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.
- 2023 rasi palan
- 2024 raasi palan
- 2024 rasi palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan sun tv
- rasi palan tamil
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- Today Rasi Palan Tamil
- vendhar tv daily rasi palan
- vendhar tv rasi palan