இன்றைய ராசி பலன் 14.07.2023 -Horoscope Today
இன்று மேஷம், ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை நட்சத்திரத்தில் நாள் முழுவதும் சந்திரன் பயணிக்க உள்ளார். சந்திரனின் சஞ்சாரத்தால் ரிஷபம், மீன ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். அதே சமயம் கன்னி ராசியில் உள்ள அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். கவனம் தேவை. இன்றைய நாள் பலன் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம். இன்றைய நாள் பலனை ஜோதிட நிபுணர் ராகேஷ் அவர்கள் கணித்துள்ளார்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக அமையும். வேலையில் வெற்றி கிடைக்கும், ஊக்கம் கிடைக்கும். ராசிக்கு இரண்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பது உங்களுக்கு சுப பலன்களைத் தரும். இன்று நீங்கள் சில பெரிய வேலைகளில் ஈடுபடுவீர்கள் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
வாழ்க்கை துணையின் சிறந்த ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையும் கூடும். இன்று பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் ஊக்கமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம் ராசிபலன்
ரிஷபம் ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக தடைப்பட்ட உங்களின் வேலை இன்று முடிக்க முடியும். இன்று சட்ட விஷயங்களில் சாதக நிலை பெறலாம். . சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். அதே சமயம் இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். மனவருத்தம் ஏற்படலாம்.
உங்கள் பேச்சு, நடத்தையில் கட்டுப்பாடு தேவை. அதன் மூலம் நீங்கள் சூழ்நிலையைச் சாதகமாக வைத்திருக்க முடியும். மனைவியுடன் மகிழ்ச்சியான தருணங்களைக் கழிப்பீர்கள். இன்று வியாபாரத்தில் உங்கள் முடிவெடுக்கும் திறனின் முழு பலனையும் பெறுவீர்கள்.
மிதுன ராசி பலன்
இன்று மிதுன ராசிக்காரர்கள் நினைத்த காரியம் நிறைவேறி திருப்தி அடைவார்கள். செலவு அதிகரிக்கக்கூடிய நாள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகள் தரப்பிலிருந்து ஏதாவது இருந்து வந்த டென்ஷனிலிருந்து விடுபட முடியும்.
இன்று நீங்கள் காதல் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துச் செல்வதும், மிகவும் புத்திசாலித்தனமாக நடப்பதும் அவசியம். உங்கள் தாயாருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே பொறுமையாக சூழ்நிலையை கையாளவும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.
கடக ராசி பலன்
இன்று கடக ராசிக்காரர்கள் தாயாரின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உடல்நிலை பிரச்னைகள் வந்து செல்லும். அதன் தாக்கம் உங்கள் வேலை, குடும்ப பொறுப்புக்களை பாதிக்கும்.
பணியிடத்திலும், சமூகத்திலும் உங்கள் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவும். இன்று நிதி விஷயங்களில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் குழந்தை மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். உங்களின் எந்த விருப்பமும் இன்று நிறைவேறும்.
சிம்ம ராசி பலன்
இன்று சிம்ம ராசிக்காரர்கள் இன்று, நீங்கள் வணிகம், வேலை தொடர்பாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் உங்களுக்கு நன்மைகளும், லாபமும் கிடைக்கும். போட்டியில் உற்சாகமாக பங்கேற்பீர்கள்.
உங்கள் குழந்தைகளுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும், குழந்தைகளின் பாசமும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மாணவர்கள் விரும்பிய படிப்பில் சேர நல்ல வாய்ப்பு உண்டு. இதற்கு சாதகமான நாள். இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள்.
கன்னி ராசி பலன்
இன்று, கன்னி ராசிக்காரர்கள் ஆன்மிகப் பணிகளில் சுறுசுறுப்பாக பங்கேற்பார்கள். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் தொழிலுக்காக நீங்கள் முடிவு எடுக்கும் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். யாருடைய வற்புறுத்தலில் முடிவு எடுக்காதீர்கள்.
வார்த்தைகளிலும் கவனம் தேவை. உங்கள் துணைக்கு இன்று உடல் ரீதியாக சில பிரச்சனைகள் இருக்கலாம். தொழிலதிபர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த முதலீடு செய்ய சாதக நாளாக இருக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் வேலை தடைப்படலாம். தொழில்நுட்ப வேலையில் உள்ளவர்களுக்கு வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நிதி விஷயங்களில் உங்களுக்கு குழப்பமான நாளாக இருக்கும்.
தேவையற்ற செலவுகள் மற்றும் திடீர் செலவுகள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், உதாசினமான பேச்சு உங்களின் நெருங்கிய உறவினர்களுடனான உறவுகள் இன்று கெட்டுவிடும். ஆரோக்கியம் மென்மையாக இருக்கும்.
விருச்சிகம் ராசிபலன்
விருச்சிக ராசியினர் எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்டவேண்டாம். இன்று உங்கள் பிள்ளைகள் சிறப்பாகச் செயல்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும்.
திருமணமானவர்களின் வாழ்க்கையில் இனிமை இருக்கும். சொத்து சம்பந்தமான தகராற்றில் நல்ல முடிவு கிடைக்கும். இன்று உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த எதிரிகளை சிறந்த முறையில் எதிர்கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடன் சில எதிர்கால திட்டங்களைப் பற்றி விவாதிப்பீர்கள்.
தனுசு ராசிபலன் 13 ஜூலை 2023:
தனுசு ராசியினருக்கு உங்களில் தொண்டு செய்யும் குணம் அதிகரிக்கும். இன்று மத சடங்குகளில் ஈடுபடுவீர்கள். பேச்சின் இனிமை இருக்கும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். ஒரு பெண் நண்பரின் உதவியால், இன்று உங்களுக்கு உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் உள்ள தடைகளை கடக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும்.
மகர ராசி பலன்
உங்கள் பிள்ளைகளின் கல்வியில் உள்ள இடையூறுகளை நீங்கும். உங்கள் அன்றாட வேலைகளை கையாள்வதில் கவனமாக செயல்படவும். இன்று, மதிப்புமிக்க பொருட்களை கவனமுடன் கையாளவும். , இதுபோன்ற விஷயங்களில் சில தேவையற்ற செலவுகளும் வரும். நீங்கள் செலவு செய்ய விரும்பாவிட்டாலும் செய்ய வேண்டியிருக்கும். உறவினர் தரப்பிலிருந்து மரியாதை கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மன ஒற்றுமை இருக்கும்.
கும்பம் ராசிபலன்
இன்று உங்கள் புத்திசாலித்தனத்தால் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வீர்கள். உங்கள் வியாபாரம் உச்சத்தை எட்டும். உங்களைச் சுற்றியுள்ள சூழல் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறால் இன்று வேலையில் பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று எந்த புதிய திட்டங்களிலும் ஈடுபட வேண்டாம்.
மீனம் ராசிபலன்
இன்று உங்கள் தொழிலில் திருப்தி அடைவீர்கள். நிச்சயமாக லாபம் கிடைக்கும். உங்கள் பணித் துறையில் வெற்றி கிடைக்கும். இன்று பொருளாதார ரீதியாக நல்ல நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணத்தைப் பெறலாம். நீங்கள் சில ஆபத்தான வேலைகளை கவனமாக செய்து முடிக்க முடியும்.
- 2023 astroloji
- 2023 rasi palan
- astrolog
- astrolog alexandra coman
- astrolog elvan
- astrolog meral çolak
- astrologie
- Astrology
- astroloji
- daily rasi palan
- daily rasipalan
- Featured
- horoscope
- indraya rasipalan
- indraya rasipalan shelvi
- raasi palan
- rasi palan
- rasi palan 2021
- rasi palan today
- rasi palangal
- rasipalan
- rasipalan 2023
- rasipalan in tamil
- rasipalan today
- shelvi rasipalan vendhar tv
- shelvi vendhar tv indraya rasipalan
- sinan hoca astrolog
- sun tv rasi palan
- this week rasipalan
- Today Rasi Palan
- today rasipalan
- vaara rasi palan
- vara rasipalan
- vendhar tv daily rasipalan
- vendhar tv july rasipalan
Leave a comment